IPL 2023 LSG vs PBKS LIVE: லக்னோவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய பஞ்சாப்; பரபரப்பான போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி..!
IPL 2023 LSG vs PBKS LIVE: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
LIVE
Background
ஐபிஎல் 16வது சீசனின் 21 போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு 7 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கே.எல் ராகுலும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவானும் தலைமை தாங்குகின்றனர்.
ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் 1 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஒரு முறை வெற்றிபெற்றுள்ளது.
இந்தநிலையில், ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நேருக்கு நேர் சாதனையின் முழு விவரம் இதோ...
மொத்தப் போட்டிகள் | 1 |
பஞ்சாப் வெற்றி | 0 |
லக்னோ வெற்றி | 1 |
முடிவு இல்லை | 0 |
பஞ்சாப் தோல்வி | 1 |
லக்னோ தோல்வி | 0 |
பஞ்சாப் அணியின் அதிகபட்ச ஸ்கோர் | 133 |
லக்னோ அணியின் அதிகபட்ச ஸ்கோர் | 153 |
பஞ்சாப் அணியின் குறைந்த ஸ்கோர் | 133 |
லக்னோ அணியின் குறைந்த ஸ்கோர் | 153 |
சிறந்த வீரர்கள்:
புள்ளிவிவரங்கள் | சிறந்த வீரர்கள் | செயல்திறன் |
அதிக ரன்கள் | குயின்டன் டி காக் (லக்னோ) | 46 ரன்கள் |
அதிக விக்கெட்டுகள் | ககிசோ ரபாடா (பஞ்சாப்) | 4 விக்கெட்டுகள் |
அதிக மதிப்பெண் | குயின்டன் டி காக் (லக்னோ | 46 ரன்கள் |
சிறந்த பந்துவீச்சு படம் | ககிசோ ரபாடா (பஞ்சாப்) | 4/38 |
வரும் போட்டிகள்:
- ஏப்ரல் 15 (இன்று) - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், லக்னோ (இரவு 7:30 மணி)
- ஏப்ரல் 28 - பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மொஹாலி (இரவு 7:30 மணி)
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), அமித் மிஸ்ரா, அவேஷ் கான், ஜெய்தேவ் உனத்கட், மார்க் வூட், ரவி பிஷ்னோய், ஆயுஷ் படோனி
பஞ்சாப் கிங்ஸ்:
அதர்வா டைய்டு, பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், பானுகா ராஜபக்சே, சாம் கரன் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ரிஷி தவான், அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர்
LSG vs PBKS Live Score: பஞ்சாப் வெற்றி..!
19.3 ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி இலக்கான 160 ரன்களை விட ஒரு கூடுதலாகவே எடுத்து லக்னோவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது.
LSG vs PBKS Live Score: ஷிகிந்தர் ராசா விக்கெட்..!
சிறப்பாக விளையாடி வந்த ஷிகிந்தர் ராசா தனது விக்கெட்டை பிஷ்னாய் பந்து வீச்சில் இழந்துள்ளார்.
LSG vs PBKS Live Score: 17 ஓவர்கள் முடிவில்..!
17 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் சேர்த்துள்ளது.
LSG vs PBKS Live Score: விக்கெட்..!
ஷ்கந்தர் ராசாவுக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்த ஜிதேஷ் தனது விக்கெட்டை மார்க் வுட் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
LSG vs PBKS Live Score: ஷிகந்தர் ராசா அரைசதம்..!
சிறப்பாக ஆடி வந்த ஷிகந்தர் ராசா 34 பந்தில் அரைசதம் விளாசியுள்ளார்.