![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
DC vs SRH, Match Highlights: பவுலிங்கில் அசத்தல்.. பேட்டிங்கில் சொதப்பல்.. டெல்லியிடம் சரணடைந்த ஹைதராபாத் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி..!
IPL 2023, DC vs SRH: 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
![DC vs SRH, Match Highlights: பவுலிங்கில் அசத்தல்.. பேட்டிங்கில் சொதப்பல்.. டெல்லியிடம் சரணடைந்த ஹைதராபாத் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி..! IPL 2023: DC won the match by 7 runs against SRH in Match 34 at Rajiv Gandhi International Stadium DC vs SRH, Match Highlights: பவுலிங்கில் அசத்தல்.. பேட்டிங்கில் சொதப்பல்.. டெல்லியிடம் சரணடைந்த ஹைதராபாத் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/24/7eeef23ebb3ef6f70d1c610a700d0bff1682357932105224_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
16வது சீசன் ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைவதற்காக அனைத்து அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் தங்களது முழு பலத்தினை பயன்படுத்தி மல்லுகட்டி வரும் நிலையில், புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருந்து முன்னேறுவதற்காக இன்று அதாவது ஏப்ரல் 24ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதரபாத் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின
டாஸ்:
ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இந்த சீசன் தொடங்கியது முதல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகளாக சன்ரைசர்சும், டெல்லி அணியும் உள்ளது. இது இரு அணி வீரர்களுக்கும், ரசிகர்களுக்குமே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இந்த நிலையில் பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணி முதல் ஓவரிலேயே சால்ட்டின் விக்கெட்டை புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் இழந்து வெளியேற்றினார். அடுத்து களமிறங்கி 15 பந்தில் 25 ரன்கள் சேர்த்த மிட்ஷெல் மார்ஷூம் நடராஜன் பந்து வீச்சில் வெளியேறினார். இதனால் இந்த போட்டியிலும் பொறுப்பு மீண்டும் கேப்டன் வார்னர் மீது விழுந்தது. ஆனால் 8வது ஓவரில் டெல்லி அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்து இருந்தது. அதவாது அந்த ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தரின் ஓவரில் வார்னர், சர்ப்ரஸ் கான் மற்றும் அமன் ககிம் கான் ஆகியோர் ஒரு பந்து இடைவெளியில் தங்களது விக்கெட்டை இழந்தனர். இந்த மூன்று விக்கெட்டுகள் தான் வாஷிங்டன் சுந்தரின் இந்த சீசனில் இதுவரை இவர் கைப்பற்றியுள்ள விக்கெட்டுகள்.
அதன் பின்னர் கைகோர்த்த மனீஷ் பாண்டே மற்றும் அக்ஷர் பட்டேல் கூட்டணி அணியின் பரிதாப நிலையை அறிந்து மிகவும் நிதானமாக ஆடினர். அதாவது பவுண்டரிகளை விளாசாமல் பாலுக்கு பால் ஒரு ரன் எடுக்க வேண்டும் எனும் நோக்கில் சிறப்பாக விளையாடினர். இவர்களின் நிதான ஆட்டத்தினால் 15வது ஓவரில் தான் டெல்லி அணி 100 ரன்களைக் கடந்தது. அதன் பின்னர் அடித்து ஆட ஆரம்பித்த டெல்லி அணி விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் சேர்த்தது. ஹைதராபாத் அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அதன் பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி 10வது ஓவர் வரை ஒரு விக்கெட்டை இழந்து 58 ரன்கள் சேர்த்து இருந்த ஹைதராபாத் அணி வெற்றி இலக்கை எளிதில் எட்டிவிடும் என நினைக்கவைத்தது. அதன் பின்னர், மிகச்சிறப்பாக பந்து வீசிய டெல்லி அண்இ ஹைதரபாத் அணியின் அடுத்த 4 விக்கெட்டுகளை 14.1 ஓவரில் வீழ்த்தியது. அதன் பின்னர் வெற்றி யாருக்கு என நிர்ணயம் செய்யும் இறுதி ஓவர் வரை போட்டி சென்றது. குறிப்பாக கடைசி 2 ஓவர்களில் 23 ரன்கள் தேவை என இருந்தது. ஆனால் அதிரடியாக பவுண்டரிகளை விளாசிய க்ளாசன் 19வது ஓவரினை வீசிய நோர்க்கியா பந்தில் ஆட்டமிழக்க போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி ஓவரில் 13 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் ஹைதராபாத் அணி 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)