மேலும் அறிய

IPL 2023, DC vs CSK Match Highlights: இமாலய வெற்றியுடன் Play-Offக்குள் கெத்தாக நுழைந்த தல தோனியின் படை; ரசிகர்கள் கொண்டாட்டம்..!

IPL 2023, DC vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ப்ளேஆஃப்க்குள் இரண்டாவது அணியாக நுழைந்தது.

IPL 2023, DC vs CSK Score: 16வது ஐபிஎல் தொடரின்  லீக் போட்டிகள் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இன்று அதாவது மே மாதம் 20ஆம் தேதி சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதிக்கொண்டன.  டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 

அதன் படி சென்னை அணியின் இன்னிங்ஸை இளம் இந்திய வீரரான ருத்ராஜ் மற்றும் கான்வே ஆடினர். ஐபிஎல் தொடரில் ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு இது 50வது போட்டியாகும். இருவரும் போட்டியின் முதல் ஓவரில் மட்டும் சற்று நிதானமாக ஆடினர். அதன் பின்னர் டெல்லி அணியின் பந்து வீச்சை இருவரும் அடித்து நொறுக்கினர். இதனால் ரன்ரேட் ஓவருக்கு 10 ரன்கள் என சீராக உயர்ந்து கொண்டு இருந்தது. 5 ஓவர்களில் 50 ரன்களைத் தொட்ட சென்னை அணி, பவர்ப்ளேவின் இறுதி ஓவரில் 2 ரன்கள் மட்டும் தான் எடுத்தது. இதனால், சென்னை அணி ரசிகர்கள் சற்று அதிர்ச்சிக்கு ஆளாகினர். 

குறிப்பாக போட்டியின் 10வது ஓவரை அக்‌ஷர் பட்டேல் வீசினார் இந்த ஓவரில் ருத்ராஜ் இரண்டு சிக்ஸர்களும், 12வது ஓவரை வீசிய குல்தீப் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களும் விளாசி மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்களுக்கு பந்துகளை அனுப்பினார். ருதராஜ் மற்றும் கான்வே அடுத்தடுத்து அரைசதம் விளாசி சென்னை அணிக்கு வழு சேர்த்தனர். 50 பந்தில் 79 ரன்கள் சேர்த்த நிலையில் ருத்ராஜ் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அப்போது சென்னை அணியின் ரன் 141 ஆக இருந்தது. 

கான்வேவுடன் கைகோர்த்த டூபே சென்னை அணியின் ரன்ரேட்டை மேலும் உயர்த்த ருத்ரதாண்டவ ஆட்டத்துக்கு அடி போட்டார். ஆனால் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடிய கான்வே டெல்லி அணியின் அனைத்து பந்து வீச்சாளர்களையும் தண்டிக்கும் படி ஆடினார். துபேவும் தனக்கு கிடைத்த பந்துகளை சிக்ஸருக்கு விளாச சென்னை அணி 18வது ஓவரிலேயே 190 ரன்களைக் கடந்தது. ஆனால் அந்த ஓவரின் இறுதிப் பந்தில் தனது விக்கெட்டை டூபே தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் மைதானத்தில் இருந்த சென்னை ரசிகர்களின் ஆரவத்துடன் தோனி களமிறங்கினார். ஆனால் அவரால் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை.  19வது ஓவரின் தொடக்கத்தில் கான்வே தனது விக்கெட்டை இழந்தார். ஆனால் அந்த ஓவரில் ஜடேஜா ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாச சென்னை அணி 200 ரன்களைக் கடந்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் சேர்த்தது. 

அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி வழக்கம்போல் சொதப்ப கேப்டன் வார்னர் மட்டும் சிறப்பாக ஆடி டெல்லி அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஆடினார். ஆனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் சென்னை அணி டெல்லி அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ப்ளேஆஃப்க்குள் இரண்டாவது அணியாக நுழைந்துள்ளது. இதனை சென்னை அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

KN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
Bakrid 2024: பக்ரீத் கொண்டாட்டம்! தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி
Bakrid 2024: பக்ரீத் கொண்டாட்டம்! தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
Embed widget