MS Dhoni in IPL: "I'm Waiting" என்பது போல் மிரட்டல் தொனியில் தோனியின் பயிற்சி வீடியோ இதோ..!
MS Dhoni in IPL: சின்னசாமி மைதானத்தில் தோனி பயிற்சி எடுக்கும் வீடியோ வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
ஐபிஎல் போட்டியில் இன்று பெங்களூரு அணியும் சென்னை அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதிக் கொள்கின்றன. இதற்காக பெங்களூரு சென்றுள்ள சென்னை அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் மிக முக்கியமாக சென்னை அணியின் கேப்டன் தோனி பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டு தோனியின் கடைசி ஐபிஎல் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் தோனி அடுத்த ஆண்டும் ஐபிஎல் விளையாடுவார் என சென்னை அணியின் வீரர் மொயின் அலி கூறியுள்ளார். இந்த சீசனுக்காக மிகவும் பலமாக தன்னையும் தனது அணியையும் தயார் படுத்தி வரும் தல தோனி பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடவுள்ள சின்னச்சாமி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதால் தோனி இங்கு போட்டியை வென்றாகவேண்டும் எனும் முடிவில் உள்ளாராம். அதுவும் மிகக் குறுகிய சிக்ஸர் பவுண்டரிகளைக் கொண்ட இந்த மைதானத்தில் சிக்ஸர்கள் பறக்க விட தோனி தன்னை தயார் படுத்தி வருகிறார்.
Sound 🔛
— IndianPremierLeague (@IPL) April 17, 2023
BRB, busy grooving to @msdhoni's mighty hits 🎶🎶
Are we going to see more of this later tonight at the M. Chinnaswamy stadium, Bengaluru? 😉#TATAIPL | #RCBvCSK pic.twitter.com/notIqcHEQx
கடந்த போட்டியில் ராஜஸ்தானிடம் சென்னையின் சொந்த மைதானத்தில் தோற்றதால், இம்முறை அவேவில் நடைபெறும் போட்டியான இந்த போட்டியை வெல்ல மிகத் தீவிரமாக சென்னை அணி உள்ளது.