Chepauk Stadium: ’தோனி’..’தோனி’.. என்று அதிர்ந்த மைதானம்.. சேப்பாக்கத்தில் பயிற்சியை காண குவிந்த ரசிகர்கள்..!
சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்களை இன்று முதல் சேப்பாக்கம் மைதானத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது வருகின்ற 31ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில், சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும்போது, பயிற்சியை காண ரசிகர்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படும் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையறிந்த சென்னை அணி ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்து ’தோனி’ ‘தோனி’ என குரல் எழுப்பி வந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் அமைந்திருக்கும் சி, டி மற்றும் இ ஸ்டாண்ட்களில் இன்று ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
Crowd building up at Chepauk for Chennai Super Kings' practice fixture. @Ruutu1331 has already played a few cracking shots . pic.twitter.com/A3lewXP1CJ
— Venkata Krishna B (@venkatatweets) March 27, 2023
அமோகமாக நடைபெறும் டிக்கெட் விற்பனை:
சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்களை இன்று முதல் சேப்பாக்கம் மைதானத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் ஒரு நபருக்கு 2 டிக்கெட்கள் என விற்பனை களைக்கட்ட தொடங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:
எம்எஸ் தோனி (கேப்டன்& விக்கெட் கீப்பர்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷர் மத்ஷோவ், துஷர் மத்ஷோவ், துஷர் மத்கே தேஷ்பான் பத்திரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், பகத் வர்மா.
ஐபிஎல் 2023-சிஎஸ்கே அட்டவணை:
- போட்டி 1: மார்ச் 31, 2023 - குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத் (இரவு 7:30 மணி)
- போட்டி 2: ஏப்ரல் 3, 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
- போட்டி 3: ஏப்ரல் 8, 2023 - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை (இரவு 7:30 மணி)
- போட்டி 4: ஏப்ரல் 12, 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
- போட்டி 5: ஏப்ரல் 17, 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி)
- போட்டி 6: ஏப்ரல் 21, 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை (இரவு 7:30 மணி )
- போட்டி 7: ஏப்ரல் 23, 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா (இரவு 7:30 மணி)
- போட்டி 8: ஏப்ரல் 27, 2023 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஜெய்ப்பூர் (இரவு 7:30 மணி)
- போட்டி 9: ஏப்ரல் 30, 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், சென்னை (மதியம் 3:30 மணி)
- போட்டி 10: மே 4, 2023 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ (மதியம் 3:30 மணி)
- போட்டி 11: மே 6, 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், சென்னை (பிற்பகல் 3:30 மணி)
- போட்டி 12: மே 10, 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
- போட்டி 13: மே 14, 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
- போட்டி 14: மே 20, 2023: டெல்லி கேப்பிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி (பிற்பகல் 3:30 மணி)