Ben Stokes CSK: சி.எஸ்.கே. அணிக்காக ஆடமாட்டாரா பென்ஸ்டோக்ஸ்..? அதிர்ச்சி பின்னணி என்ன?
Ben Stokes CSK: ஆஷஸ் தொடர் மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக ஐ.பி.எல். இறுதி கட்ட போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார்.
ஆஷஸ் தொடர் மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஆகியவற்றில் பங்கேற்பதால் , இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதி கட்ட போட்டிகளில் இருந்து விலகுவதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல். ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அதிக தொகை கொடுத்து எடுக்கப்பட்டார். இந்நிலையில், ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி மே.28 ஆம் தேதி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜூன், 1 -ஆம் தேதி அயர்லாந்து டெஸ்ட் தொடங்க இருப்பதால் ஐ.பி.எல். தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளில் சென்னை அணிக்காக ஆட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி ஏலம் எடுப்பட்டார்.
ஐ.பி.எல். இறுதிக்கட்ட போட்டிகளில் பங்கேற்கவில்லை?
இந்தாண்டு ஐ.பி.எல். தொடரின் இறுதிக்கட்ட போட்டிகள் நடைபெறும் வேளையில், இங்கிலாந்து- அயர்லாந்து இடையே டெஸ்ட் போட்டி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. ஐ.பி.எல். இறுதிப்போட்டி மே 28 -ஆம் தேதி நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டிக்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஐ,பி.எல். போட்டிகள் இருக்கிறது. ஆனால், டெஸ்ட் தொடருக்கு தயாராக வேண்டியுள்ளதால் இந்தப் போட்டிகளில் விளையாட மாட்டேன் என்று பென் ஸ்டோக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாக்-அவுட் சுற்றுப்போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.
ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் 31 ம் தேதி கோலகலமாக தொடங்குகிறது. இந்த சீசனில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், நான்கு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய எம்எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கும் இடையே நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் மோது இந்த போட்டியானது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து அணிகளும் ஆயுத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நான்கு மாதங்கள் ஓய்வு:
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜெமிசன் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார். கடந்த ஜீன் மாதம் முதல் முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் ஜெமிசன், சிகிச்சை பெற்றபோதும் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனால் எவ்வளவு காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நீண்ட காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் நியூசிலாந்து பயிற்சியாளர் கார் ஸ்டெட் தெரிவித்துள்ளார். கைல் ஜெமிசன் நியூசிலாந்துக்காக இதுவரை 16 டெஸ்டில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்எஸ் தோனி (கேப்டன்& விக்கெட் கீப்பர்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷர் மத்ஷோவ், துஷர் மத்ஷோவ், துஷர் மத்கே தேஷ்பான் பத்திரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், பகத் வர்மா.