IPL 2023, CSK vs KKR: சென்னை - கொல்கத்தா இன்று மோதல்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு? கணிப்புகள் சொல்வது இதுதான்..!
16வது ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா இடையேயான ஆட்டத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு, புள்ளி விவரங்கள் சொல்வது என்ன என்பது பற்றி காணலாம்.
16வது ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா இடையேயான ஆட்டத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு, புள்ளி விவரங்கள் சொல்வது என்ன என்பது பற்றி காணலாம்.
சென்னை - கொல்கத்தா:
நடப்பு ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பி பிரிவில், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றிருந்தது.
இதுவரை இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. முதலாவது மாலை 3.30 மணிக்கு நடக்கும் 60வது போட்டியில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் இடையேயான போட்டி நடக்கிறது. இதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடக்கும் 61வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றது.
நடப்பு தொடர் நிலவரம்
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி 2வது இடத்தில் உள்ளது. அந்த அணி 12 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் கிட்டதட்ட பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளார். அதேசமயம் கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
சென்னை அணி தனது கடைசி ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்திய நிலையில், அந்த வெற்றியை தக்க வைக்க இன்றைய ஆட்டத்தில் முயலும். அதேசமயம் கொல்கத்தா அணி ராஜஸ்தானிடம் தோற்றது. இதனால் அந்த அணி எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாறு சொல்வது என்ன?
ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 18 முறையும், கொல்கத்தா அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இந்த சீசனில் ஈடன் கார்டனில் நடந்த போட்டியில் சென்னை அணி கொல்கத்தாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இதற்கு பழிதீர்க்கும் வகையில் கொல்கத்தா அணி விளையாடும் என்பதால் இப்போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைதானத்தின் நிலவரம்
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் சென்னை மைதானம் சென்னை அணிக்கு எப்போதும் ராசியானதாகும். இந்த சீசனில் இதுவரை சென்னை அணி இம்மைதானத்தில் 6 முறை விளையாடி அதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 ஆட்டத்தில் தோற்றுள்ளது. லீக் போட்டியில் இந்த ஆட்டம் சென்னை அணிக்கு கடைசி ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பிளேயிங் லெவனில் யாருக்கு இடம் கிடைக்கும்?
சென்னை அணி: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா
கொல்கத்தா அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுயாஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.