![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPL 2022: முதல் போட்டியே சென்னை - மும்பை.? அதுவும் சேப்பாக்கத்தில்.. - களைகட்டும் ஐபிஎல் 2022!
Cricbuzz-இல் வெளியான தகவலின்படி, ஐபிஎல் 2022 வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
![IPL 2022: முதல் போட்டியே சென்னை - மும்பை.? அதுவும் சேப்பாக்கத்தில்.. - களைகட்டும் ஐபிஎல் 2022! IPL 2022 to be held in India, likely to begin on April 2, CSK vs MI in Chennai Chepauk Stadium: Report IPL 2022: முதல் போட்டியே சென்னை - மும்பை.? அதுவும் சேப்பாக்கத்தில்.. - களைகட்டும் ஐபிஎல் 2022!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/24/3406bd0833e5aba8fefc1920f7d69c23_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கும் போது மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடர்கள் போல் தொடங்கப்பட்டது. அப்போது இந்தத் தொடரின் முக்கிய நோக்கம் இந்தியாவில் உள்ள உள்ளூர் திறமை வெளியே கொண்டு வர ஒரு பாலமாக அமையும் என்று கருதப்பட்டது. அதன்படி தொடங்கப்பட்ட ஐபிஎல் இப்போது முழு பிஸினசாகவே பார்க்கப்படுகிறது.
வழக்கத்தை விட வரும் ஆண்டு இன்னும் சிறப்பாக நடக்கவுள்ளது ஐபிஎல். வரும் ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு புது அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த இரு அணிகளுக்கான உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் அணியை ஏலத்தில் எடுத்த தொகைகள் பிரம்மிக்க வைத்துள்ளன. அதன்படி ஆர்பிஎஸ்ஜி நிறுவனம் 7,090 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியையும், சிவிசி நிறுவனம் 5625 கோடி ரூபாய்க்கு அகமதாபாத் அணியையும் எடுத்துள்ளனர்.
இப்படியாக வரும் ஐபிஎல் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் மேலும் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக வரும் ஐபிஎல் போட்டி இந்தியாவில் தான் நடைபெற இருப்பதாகவும், ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாராட்டு விழாவிற்கு வந்து இறங்கிய எம்.எஸ்.தோனியிடம் செய்தியாளர்கள் நீங்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், இப்போது தான் நவம்பர் மாதம் நடைபெற்று வருகிறது. அடுத்த ஐபிஎல் 2022 தொடர் ஏப்ரல் மாதம் நடைபெறும். நான் விளையாடலாமா ? வேண்டாமா ? என்று யோசிப்பதற்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது என்று தெரிவித்தார். இதை கேள்விப்பட்ட சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்கள் அடுத்த ஆண்டும் எம்.எஸ். தோனி நிச்சயம் விளையாடுவார் என்று துள்ளிக்குதித்தனர்.
Cricbuzz-இல் வெளியான தகவலின்படி, ஐபிஎல் 2022 வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாகவும், முதல்போட்டியிலேயே சென்னை அணியும், மும்பை அணியும் விளையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையென்றால் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சென்னை களமிறங்கும். இந்த தகவலே சென்னை ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் வெளியான தகவலின்படி, 10 அணிகள் இருப்பதால் 74 ஆட்டங்கள் இருக்கலாம் எனகூறப்படுகிறது. இரண்டு மாதங்கள் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஜூன் கடைசியில் இறுதிப்போட்டி இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)