IPL 2022 Tickets: தொடங்கியது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை
ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.
ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தங்களுடைய பயிற்சியை தொடங்கியுள்ளனர். பல்வேறு அணிகளின் வீரர்களும் தங்களுடைய நாடுகளிலிருந்து மும்பை வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் குஜராத் மாநிலத்தின் சூரத்தில் தன்னுடைய பயிற்சியை மேற்கொண்டது.
இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். இந்நிலையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய ஜெர்ஸியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
𝗧𝗵𝗲 𝘄𝗮𝗶𝘁 𝗶𝘀 𝗼𝘃𝗲𝗿 👏 👏
— IndianPremierLeague (@IPL) March 23, 2022
Tickets for #TATAIPL 2022 will be 𝗟𝗜𝗩𝗘 from 12PM IST onwards today 👍 👍
Go grab your tickets 🎫 🎫 - See you at the stands! 🏟️ 📣
Details below 🔽
இந்நிலையில், அடுத்த வாரம் தொடங்க இருக்கும் ஐ.பி.எல். போடிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. அதன்படி, மும்பை வான்கடே மைதானத்தில் (Wankhede Stadium ) டிக்கெட் விலை ரூ.2500 முதல் ரூ.4000 வரையிலும், டி,வொய் பட்டீல் ( DY Patil Stadium) மைதானத்தில் ரூ.800 முதல் ரூ.2500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புனேவில் உள்ள எம்.சி.ஏ. ஸ்டேடியத்தில் (MCA International stadium) ரூ.1000 முதல் ரூ.8000 வரியிலும், சி.சி.ஐ. ப்ராபோர்ன் (Brabourne ) ஸ்டேடியத்திற்கு ரூ.2500 முதல் ரூ.3000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, நவி மும்பை, புனே ஆகிய நகரங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் நடத்தப்பட உள்ளது.
மேலும், கிரிக்கெட் போட்டியின்போது 25% பார்வையாளர்கள் கொரோனா வழிக்காட்டுதல் நடவடிக்கையின்படி அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 23) பிற்பகல் 12 மணியில் இருந்து தொடங்குகிறது.
www.iplt20.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளைப் பெறலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்