CSK vs PBKS: சிஎஸ்கேவிற்கு எதிராக மீண்டும் அசத்திய கப்பர் ஷிகர் .. பஞ்சாப் 187 ரன்கள் குவிப்பு !
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 187 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மயாங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இந்தப் போட்டியில் இரண்டு ரன்கள் அடித்த போது ஐபிஎல் போட்டிகளில் 6000 ரன்களை எட்டி அசத்தினார்.
சிஎஸ்கே அணி தொடக்க ஓவர்களில் சிறப்பாக பந்துவீசியது. இதன்காரணமாக பஞ்சாப் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 5 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் பஞ்சாப் கேப்டன் மயாங்க் அகர்வால் 21 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்த போது மஹீஷ் திக்ஷனா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்பு வந்த பனுகா ராஜபக்சா ஷிகர் தவான் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டனர். இதன்காரணமாக 10 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்தது.
Shik-har maidan fateh! 🙌🏻
— Punjab Kings (@PunjabKingsIPL) April 25, 2022
🔝 knock. An unbeaten 88 runs off 59 balls. 👏🏻#SaddaPunjab #IPL2022 #PunjabKings #ਸਾਡਾਪੰਜਾਬ #PBKSvCSK pic.twitter.com/PdTNKgZHiE
அதன்பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 37 பந்துகளில் ஐபிஎல் தொடரில் 46ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் பனுகா ராஜபக்சாவும் தவானுக்கு நல்ல ஆதரவு அளித்து வந்தார். இதனால் 15 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் அணி அதிரடி காட்டும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அப்போது 32 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்து 42 ரன்கள் எடுத்திருந்த போது பனுகா ராஜபக்சே பிராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
18 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. 19ஆவது ஓவரின் லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடி காட்டினார். அந்த ஓவரில் அவர் 2 சிக்சர் மற்றும் 1பவுண்டரி விளாசினார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 88* ரன்கள் எடுத்தார். சென்னை அணியில் பிராவோ 2 விக்கெட் வீழ்த்தினார்.
மேலும் படிக்க: CSK Vs PBKS, IPL 2022 Live: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி : சென்னை டாஸ் வென்று பீல்டிங் தேர்வு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்