LSG vs MI: எட்டாவது முறையும் எட்டாத வெற்றி... தொடரும் மும்பையின் தோல்வி சோகம்..லக்னோ அசத்தல் !
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 2019ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கேப்டன் கே.எல்.ராகுலின் அபார சதத்தால் லக்னோ அணி 20 ஓவர்களின் முடிவில் 168 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் மற்றும் இஷான் கிஷன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக இஷான் கிஷன் ஆமை வேகத்தில் ஆடினார். அவர் 20 பந்துகளை சந்தித்து 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டிவால்ட் பிரேவிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
அதற்கு அடுத்த ஓவரில் கேப்டன் ரோகித் சர்மா 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்காரணமாக மும்பை அணி 10 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சூர்யகுமார் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 15 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 71 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் பொல்லார்டு மற்றும் திலக் வர்மா இருந்தனர். திலக் வர்மா சற்று அதிரடி காட்ட தொடங்கினார்.
That's that from Match 37 and @LucknowIPL take this home with a 36-run win over #MumbaiIndians
— IndianPremierLeague (@IPL) April 24, 2022
Scorecard - https://t.co/O75DgQTVj0 #LSGvMI #TATAIPL pic.twitter.com/9aLniT8oHi
17 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 119 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 18 பந்துகளில் மும்பை அணிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது திலக் வர்மா 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 39 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது முத பந்தில் பொல்லார்டு ஆட்டமிழந்தார். 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் நடப்பு தொடரில் விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்