Dhoni Jersey no 7: “மூடநம்பிக்கையில் நாட்டம் கிடையாது” - நம்பர் 7 தேர்வு செய்தது குறித்து தோனி ஷேரிங்ஸ்
ஐபிஎல் 2022 முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கடந்த தொடரில் இரண்டாம் இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. இதன்படி ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 26-ம் தேதி சனிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கடந்த தொடரில் இரண்டாம் இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும்.
🦁nline classes ➡️ https://t.co/7JAlP9Ndqu#PowerOf7 #WhistlePodu 💛 @TheIndiaCements pic.twitter.com/jibppxbYnZ
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) March 16, 2022
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்து கொண்டனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தோனி பதில் அளித்தார். அதில், 7 நம்பரைத் தேர்வு செய்ய காரணம் என்ன என கேட்டபோது, “ஆரம்பத்தில் 7 என்ற நம்பரை எனது லக்கி நம்பராக அனைவரும் கருதினார்கள். ஆனால், நான் ஜூலை மாதம் 7-ம் தேதி பிறந்ததால், 7 என்ற நம்பரை தேர்வு செய்தேன், அவ்வளவே! எந்த நம்பர் நல்ல நம்பர் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து தேர்வு செய்வதற்கு பதிலாக, நான் பிறந்த தினத்தை தேர்வு செய்யலாம் என முடிவு செய்தேன். எனக்கு மூட நம்பிக்கைகளில் நாட்டம் கிடையாது. என் மனதுக்கு நெருக்கமான ஒரு நம்பர் 7. எனவே பல ஆண்டுகளாக அதே நம்பரை பயன்படுத்தி வருகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட இருக்கும் போட்டிகள்: முழு விவரம்:
Start the Summer Whistles... #EverywhereWeGo! 🥳#TataIPL #WhistlePodu 🦁💛 pic.twitter.com/YGrRPIQysy
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) March 6, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்