Jasprit Bumrah Wife Reaction: "என் கணவர் ஃபையர்” பும்ராவின் 5 விக்கெட்டுகளுக்கு மனைவி சஞ்சனா ட்வீட்!
முதல் இன்னிங்ஸில், 20 ஓவர் வரை தாக்குப்பிடித்த கொல்கத்தா அணி முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருக்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ராவுக்கு அவரது மனைவி சஞ்சனா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.
இந்த போட்டியில் ஓப்பனிங் களமிறங்கிய ரஹானே, வெங்கடேஷ் ஐயர் ஜோடி சிறப்பாக விளையாடினர். அரை சதம் கடப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்கள் எடுத்து வெங்கடேஷ் அவுட்டாக, நிதிஷ் ரானா களமிறங்கினார். அவரும் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ராவின் வேகத்தில் சிக்கி அவுட்டானார். அவரை அடுத்து களமிறங்கிய பேட்டர்கள் சீட்டுக்கட்டு போல சரிந்தனர்.
For his FIVE-wicket haul and brilliant bowling figures of 5/10, @Jaspritbumrah93 is our Top Performer from the first innings.
— IndianPremierLeague (@IPL) May 9, 2022
A look at his bowling summary here 👇👇 #TATAIPL #MIvKKR pic.twitter.com/6MJZgUBVp9
சிறப்பாக பந்துவீசிய பும்ரா, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தாவின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தினார். நிதிஷ் ராணா, ரஸல், ஷெல்டன் ஜாக்சன், பாட் கம்மின்ஸ், சுனில் நரைன் என கொல்கத்தாவின் அதிரடி பேட்டர்களை பெவிலியனுக்கு அனுப்பினார் பும்ரா.
Holy moly! My husband is 🔥🔥🔥
— Sanjana Ganesan (@SanjanaGanesan) May 9, 2022
இந்நிலையில், பும்ராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. குறிப்பாக, பும்ராவின் மனைவியும் கிரிக்கெட் தொகுப்பாளருமான சஞ்சனா தனது ட்விட்டர் பக்கத்தில், “என் கணவர் ஃபையர்” என பதிவிட்டிருக்கிறார். இது வைரலாகி வருகிறது. முதல் இன்னிங்ஸில், 20 ஓவர் வரை தாக்குப்பிடித்த கொல்கத்தா அணி முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

