IPL 2022, Full Winners List: ஆரம்பம் முதலே ஐபிஎல் தொடரில் அதிரடி.. யார் யாருக்கு என்ன அவார்ட்..? விவரங்கள் உள்ளே!
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட விருதுகளை கீழே பார்க்கலாம்.
![IPL 2022, Full Winners List: ஆரம்பம் முதலே ஐபிஎல் தொடரில் அதிரடி.. யார் யாருக்கு என்ன அவார்ட்..? விவரங்கள் உள்ளே! IPL 2022 full list award winners Emerging Player, Super Striker, Fairplay Price money other award winners check details IPL 2022, Full Winners List: ஆரம்பம் முதலே ஐபிஎல் தொடரில் அதிரடி.. யார் யாருக்கு என்ன அவார்ட்..? விவரங்கள் உள்ளே!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/30/5cc884c0e673f54c73d8e7afbd52b2bf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 15வது சீசன் இறுதிபோட்டி (நேற்று) ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. தாங்கள் பங்கேற்ற முதல் சீசனிலேயே குஜராத் அணி பட்டம் பெற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
முதலில் டாஸ் வென்ற RR கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் ராயல்ஸ் அணிக்கு நல்ல தொடக்கத்தை வழங்கினர், ஆனால் பவர்பிளேக்குப் பிறகு ராஜஸ்தான் அணியின் விக்கெட்கள் சரசரவென சரிய தொடங்கியது. குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மிகவும் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை அள்ளினார். இவருக்கு உறுதுணையாக தமிழக வீரர் சாய் கிஷோர் 2 விக்கெட்களை சாய்க்க, சமி,தயாள், ரசித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். இதன்மூலம், 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்கள் 130 ரன்கள் மட்டும் எடுத்தது.
.@gujarat_titans winning their maiden IPL Title in their maiden IPL season at the Narendra Modi Stadium, Ahmedabad! @GCAMotera 🏆 🔝
— IndianPremierLeague (@IPL) May 29, 2022
Stuff that dreams are made of! ☺️ 👏
W. O. W! 🙌 🙌#TATAIPL pic.twitter.com/qNMtJZHwDv
அதன்பிறகு களமிறங்கிய குஜராத் அணி 18.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் 3 விக்கெட்களை கைப்பற்றி 34 ரன்கள் குவித்து குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட விருதுகளை கீழே பார்க்கலாம்...
- சஞ்சு சாம்சன் ரன்னர்-அப் கோப்பை மற்றும் ரூ. 12.5 கோடியை பெற்றார்.
- ஜோஸ் பட்லர் மிகவும் மதிப்புமிக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
- கொல்கத்தா நைட் ரைடர்ஸின் எதிராக சிறப்பான கேட்சை பதிவு செய்த எவின் லூயிஸின் பெஸ்ட் ஆப் தி சீசன் அவார்ட் வழங்கப்பட்டது.
- ஜோஸ் பட்லர் இந்த சீசனில் 863 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.
- யுஸ்வேந்திர சாஹல் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக ஊதா நிற தொப்பியை கைப்பற்றினார்.
- ஜோஸ் பட்லர் 83 ஃபோர்ஸ் அடித்து அதிக ஃபோர்ஸ் அடித்த வீரர் என்ற விருதை பெற்றார்.
- லாக்கி பெர்குசன் சீசனின் வேகமான டெலிவரி விருதை வென்றார்.
- ஜோஸ் பட்லர் சீசனின் பவர் பிளேயர்.
- ஃபேர்பிளே விருதை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் பகிர்ந்து கொண்டன.
- இந்த சீசன் முழுவதும் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லருக்கு கேம்சேஞ்சர் அவார்டு வழங்கப்பட்டது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தினேஷ் கார்த்திக் 183.33 ஸ்ட்ரைக் ரேட்டுடன் போட்டியை முடித்ததற்காக 'சூப்பர் ஸ்டிரைக்கர்' விருதைப் பெற்றார். அவருக்கு டாடா பஞ்ச் காரும் பரிசாக வழங்கப்பட்டது.
- ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக நேற்றைய போட்டியில் 45 ரன்கள் எடுத்ததற்காக 'லெட்ஸ் கிராக் இட் சிக்ஸஸ்' விருதை வென்றார்.
- வளர்ந்து வரும் வீரர் விருதை உம்ரான் மாலிக் வென்றார்.
.@josbuttler dazzled with the bat & slammed 8⃣6⃣3⃣ runs to bag the @aramco Orange Cap.👌 👌@yuzi_chahal scalped 2⃣7⃣ wickets to top the bowling charts to bag the @aramco Purple Cap. 👍 👍
— IndianPremierLeague (@IPL) May 29, 2022
Congratulations to the two for powering @rajasthanroyals to the #TATAIPL 2022 Final. 👏👏 pic.twitter.com/jZP66cDx5b
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)