IPL 2022 Final GT vs RR LIVE:முதல் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற குஜராத்.. !
IPL 2022 Final GT vs RR LIVE Updates: ராஜஸ்தான் ராயல்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் இறுதிப் போட்டி தொடர்பான உடனுக்குடன் தகவல்கள் இதோ...!
LIVE
Background
விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் தொடர் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. இன்று அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்கியுள்ள குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேபோல் முதல் ஐபிஎல் தொடருக்கு பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன்காரணமாக இந்த இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள்?
குஜராத் டைட்டன்ஸ்:
குஜராத் டைட்டன்ஸ் அணியை பொறுத்தவரை நடப்புத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, விருத்திமான சாஹா, சுப்மன் கில் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து வருகின்றனர். அதேபோல் பந்துவீச்சில் முகமது ஷமி மற்றும் ரஷீத் கான் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆகவே முதல் குவாலிஃபையர் போட்டியில் களமிறங்கிய அதே அணியே இன்று களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச அணி: ஹர்திக் பாண்ட்யா,விருத்திமான் சாஹா,சுப்மன்கில், மேத்யூ வேட்,மில்லர்,ராகுல் திவாட்டியா,ஜோசப்,யஷ் தயால்,சாய் கிஷோர்,முகமது ஷமி,ரஷீத் கான்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் களமிறங்கிய வெற்றி கூட்டணியையே மீண்டும் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் சாஹல் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவருக்கு மெக்கோய் மற்றும் அஷ்வின் ஆகியோர் பக்க பலமாக உள்ளனர். பேட்டிங்கில் பட்லர் மற்றும் சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மற்ற வீரர்கள் பேட்டிங்கில் கைக் கொடுக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணி தன்னுடைய இரண்டாவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று கருதப்படுகிறது.
உத்தேச அணி: சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ஜெய்ஷ்வால்,படிக்கல், ஹெர்ட்மேயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின்,போல்ட்,பிரசித் கிருஷ்ணா, சாஹல்,மெக்கோய்
இன்றைய இறுதிப் போட்டியில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய வீரர்களாக பட்லர், சாஹல், ரஷீத் கான், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், அஷ்வின், ஷமி ஆகியோர் உள்ளனர்.
IPL 2022 Final GT vs RR LIVE: ராஜஸ்தானை வீழ்த்தி சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் !
15வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
IPL 2022 Final GT vs RR LIVE: 12 ஓவர்களின் முடிவில் குஜராத் 77/2
12 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது.
IPL 2022 Final GT vs RR LIVE: 6 ஓவர்களின் முடிவில் குஜராத் 33/2
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 6 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.
IPL 2022 Final GT vs RR LIVE: 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் 130/9
குஜராத் டைடான்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது.
IPL 2022 Final GT vs RR LIVE: 18 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் 120/7
18 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.