Mitchell Marsh Covid Positive: டெல்லி அணியின் மிட்சல் மார்ஷிற்கு கொரோனா தொற்று உறுதி- வெளியான அதிர்ச்சி தகவல் !
டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியானது.
![Mitchell Marsh Covid Positive: டெல்லி அணியின் மிட்சல் மார்ஷிற்கு கொரோனா தொற்று உறுதி- வெளியான அதிர்ச்சி தகவல் ! IPL 2022: Delhi Capitals all-rounder Mitchell Marsh has tested positive for COVID 19 admitted to a hospital Mitchell Marsh Covid Positive: டெல்லி அணியின் மிட்சல் மார்ஷிற்கு கொரோனா தொற்று உறுதி- வெளியான அதிர்ச்சி தகவல் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/cdc04f51cc385e9e7d3dd51a02b2f14d_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடப்பு ஐபிஎல் தொடரிலும் கொரோனா தொற்று பாதிப்பு லேசாக பரவ தொடங்கியுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்டிற்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று வீரர் ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அவருடைய ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவு வெளியாகவில்லை. ஆகவே அதுவரை அனைத்து டெல்லி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு வீரருக்கும் 3 ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த மூன்றிலும் அவர்களுக்கு நெகடிவ் வரும் பட்சத்தில் அவர்கள் புனே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வீரர் மிட்சல் மார்ஷிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
OFFICIAL STATEMENT:
— Delhi Capitals (@DelhiCapitals) April 18, 2022
Delhi Capitals all-rounder Mitchell Marsh has tested positive for COVID-19, following which he has been admitted to a hospital. The Delhi Capitals medical team is closely monitoring Marsh’s condition. pic.twitter.com/lvatopJtcV
இவர் தவிர டெல்லி அணியில் மற்ற சிலருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அவர்கள் அனைவரும் கொரோனா தொற்று அறிகுறி எதுவும் காட்டவில்லை என்று தெரிகிறது. அவர்களின் உடல்நிலை குறித்து டெல்லி அணியின் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற டெல்லி வீரர்கள் அனைவரும் பயோபபுள் பாதுகாப்பாக உள்ளதாக டெல்லி அணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. டெல்லி அணி வரும் 20ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. அந்தப் போட்டி புனேவில் நடைபெற உள்ளது. எனினும் அந்தப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் தற்போது வெளியாகவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)