IPL 2022, CSK vs RCB: ’அணி என பிரிந்தது போதும்...” - ஐபிஎல் ரசிகர்களை உருக வைத்த அந்த வைரல் ஃபோட்டோ!
சென்னை அணிக்கு ஓப்பனிங் செய்து வந்த டுப்ளிசி இம்முறை பெங்களூரு அணியின் கேப்டனாக விளையாடுவதால், சென்னை அணிக்கு எதிராக எப்படி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
2022 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தற்போது வரை 4 போட்டிகளில் விளையாடி 4 தோல்வியை பதிவு செய்துள்ளது. இதனால் இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக சென்னை அணியின் வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
இன்று, சென்னை அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரு அணி வீரர்களின் பயிற்சி வீடியோ வெளியானது. டுப்ளிசி, கோலி உள்ளிட்ட பெங்களூரு வீரர்கள் சென்னை வீரர்களை சந்தித்தனர். கடந்த ஆண்டு வரை சென்னை அணிக்காக விளையாடி வந்த டுப்ளிசி, சென்னை அணி வீரர்களை பார்த்தவுடன் கட்டித்தழுவி அன்பை பரிமாறி கொண்டார். அதனை அடுத்து இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், டுப்ளிசி, கோலி ஆகியோர் தோனியை கட்டித்தழுவுவது போன்ற புகைப்படம் ஒன்றை சென்னை அணி பகிர்ந்திருக்கிறது. கிரிக்கெட் ரசிகர் ஒருவர் வரைந்திருக்கும் இந்த ஓவியம் இரு அணி ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்று வருகிறது. எலியும் பூனையுமாக இருந்து வந்த சென்னை - பெங்களூரு அணி மோதல் இந்தாண்டு மாற்றம் கண்டுள்ளது. சென்னை அணிக்கு ஓப்பனிங் செய்து வந்த டுப்ளிசி இம்முறை பெங்களூரு அணியின் கேப்டனாக விளையாடுவதால், சென்னை அணிக்கு எதிராக எப்படி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
A frame full of legacy! #WhistlePodu #Yellove 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2022
🧑🎨: Lijeshvdy pic.twitter.com/EvDrVXZfBG
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி 3 வெற்றி மற்றும் 1 தோல்வி அடைந்துள்ளது. இதன்மூலம் 6 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. ஆகவே பலம் வாய்ந்த பெங்களூரு அணியை இம்முறை தடுமாறி வரும் சென்னை அணி எப்படி எதிர்கொள்ள உள்ளது என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
மேலும் படிக்க: Watch Video: ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்ட சென்னை-பெங்களூரு வீரர்கள் - வீடியோ !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்