DC vs SRH 1st Innings Highlights: தப்பிப் பிழைத்தது ஐதராபாத்... சிறுக சிறுக சேர்த்து 134/9 ஆனது ஸ்கோர்!
ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடது போல இருந்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மைதானத்தில் இன்று ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டம் தொடங்கியது. இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ள ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதி வருகின்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பேட்டிங் தேர்வு செய்தது. டெல்லி அணிக்கு 134 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஹைதராபாத் அணி.
சொதப்பிய ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள்:
அதிக எதிர்ப்பார்ப்புடன் வார்னர் ஓப்பனிங் களமிறங்கினார். ஆனால், நார்ட்ஜே வீசிய முதல் ஓவரிலேயே டக்-அவுட் ஆகி வெளியேறியது ஹைதராபாத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதனால், முதல் ஓவரிலேயே கேப்டன் கேன் களமிறங்கிய வேண்டிய கட்டாயம். நிதானமாக விளையாடி வந்த சாஹா, வில்லியன்சன் பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை. ரபாடா ஓவரில் சாஹாவும் அவுட்டாக, இரண்டு முறை வில்லியம்சனின் கேட்ச் மிஸ் ஆனது, ஆனால் மூன்றாவது முறை அக்சர் படேல் பந்துவீச்சில் ஹெட்மேயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
3️⃣rd time's the charm 🤩
— Delhi Capitals (@DelhiCapitals) September 22, 2021
After two dropped chances, we finally got rid of the big fish courtesy of Bapu 🙌🏼#YehHaiNayiDilli #IPL2021 #DCvSRH pic.twitter.com/bg5ZFRlTx2
வரிசையாக அவரைத் தொடர்ந்து, பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால், 100 ரன்களை எட்டவே ஹைதராபாத் அணி திணறியது. கடைசி நம்பிக்கையாக ஜேசன் ஹோல்டர் ரன் எடுத்து கரை சேர்ப்பார் என நினைத்தபோது, அவரும் 10 ரன்களில் வெளியேறினார்.
காஷ்மீரைச் சேர்ந்த 19 வயதேயான இளம் வீரர் சமத், ரஷித் கான் 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர். சொதப்பலான ஸ்கோராக இருந்தபோதும், சமத் நம்பிக்கையாக ஆடினார். அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டுமென இருவரும் விளையாடினர். ஒரு சிக்சர் அடித்த அவர், ரஷித் கானுடன் சேர்ந்து சிங்கிள்ஸ், டபுள்ஸ் எடுத்தார்.இதனால் 18-வது ஓவரில் 100 ரன்களை கடந்தது ஹைதராபாத் அணி. அதனை தொடர்ந்து, ரபாடாவின்ன்விக்கெட் வேட்டைக்கு சமத்தும் சிக்கி கொள்ள, 28 ரன்களில் வெளியேறினார். இந்த இன்னிங்ஸில் ஹைதராபாத் பேட்ஸ்மேன்களில் அதிகபட்ச ஸ்கோர் இது. 7 விக்கெட்டுகள் வீழ்ந்திருந்த நிலையில், கடைசியில் 2 ரன் அவுட்டுகளால் விக்கெட்டுகள் சரிந்தது.
130 - 140 ரன்களை எட்டினால், இரண்டாவது இன்னிங்ஸில் டெல்லியை சுருட்ட வாய்ப்புள்ளது. ஆனால், 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை முடித்தது ஹைதராபாத் அணி.
டெல்லி அணி பவுலிங் சூப்பரா அல்லது ஹைதராபாத் அணியின் பேட்டிங் மிக சுமாரா என பார்த்தால், நிச்சயம் ஹைதராபாத்தின் பேட்டிங்கைதான் சுட்டிக்காட்ட வேண்டும். ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடது போல இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலாவது ஹைதராபாத் அணி பெளலர்கள் டெல்லி பேட்ஸ்மேன்களை சமாளிப்பதிலேயே இந்த அணியின் வெற்றி உள்ளது.