மேலும் அறிய

CSK vs KKR, Match Highlights: அதே பிபி மாத்திரை.. அதே ஃபினிஷிங்... ஒரே ஓவரில் போட்டியை வென்ற ஜடேஜா!

போட்டியை முடிக்க வேண்டிய பொறுப்பில் ஜடேஜாவும், சாம் கரணும் இருந்தனர். கடைசி இரண்டு ஓவரில் வெற்றியை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் விளையாடினர். ஒரே ஓவரில் போட்டியை சென்னையின் பக்கம் இழுத்தார் ஜடேஜா. 

மும்பை, பெங்களூரு என இரு முக்கிய அணிகளையும் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் தோற்கடித்த இரு அணிகள் இன்று மோதின. புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சென்னை அணியும், 4வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் மோதுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171ரன்கள் எடுத்தது கொல்கத்தா அணி.

கடினமான இலக்கை சேஸ் செய்த சென்னை அணிக்கு, ஓப்பனிங் பேட்டர்கள் ருதுராஜூம், டுப்ளெசியும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் 40+ ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை எளிதாக 100 ரன்களுக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், அடுத்து களமிறங்கிய பேட்டர்கள் கொல்கத்தா அணியின் பவுலிங்கில் சிக்கி அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். மொயின் அலி, ராயுடு, ரெய்னா, தோனி என இலக்கை எட்ட வேண்டிய பேட்டர்கள் அவுட்டாகி பெவிலியன் திரும்பியதால், கடைசியில் களமிறங்க இருந்த பேட்டர்களுக்கு அழுத்தம் கூடியது.

ஒரே ஓவரில் ரெய்னா - தோனி அவுட் ; ஒரே ஓவரில் போட்டியை வென்ற ஜடேஜா

வருண் சக்கிரவர்த்தி வீசிய 18வது ஓவரில், ரெய்னா அவுட்டாக, கூக்ளி பந்தில் சிக்கி தோனி அவுட்டானார். போட்டியை முடிக்க வேண்டிய பொறுப்பில் ஜடேஜாவும், சாம் கரணும் இருந்தனர். கடைசி இரண்டு ஓவரில் வெற்றியை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் விளையாடினர். ஒரே ஓவரில் போட்டியை சென்னையின் பக்கம் இழுத்தார் ஜடேஜா.

சுனில் நரேன் வீசிய கடைசி ஓவரில், ஜடேஜாவுடன் களத்தில் நிற்காமல் முக்கியமான தருணத்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் சாம் கரண். அவரைத் தொடர்ந்து தாகூர் களமிறங்கினார். இந்த ஓவரில் மூன்று ரன்கள் ஓடி போட்டியை சமன் செய்தனர். 3 பந்துகளில் 1 ரன் தேவை என்ற நிலையில், பரபரப்பாக நகர்ந்தது போட்டி. மூன்றில், முதல் பந்து டாட் பால் ஆனது. அடுத்த பந்தில் ஜடேஜாவுக்கு அவுட் கொடுக்கப்பட்டது. எல்பிடள்யூ கொடுத்ததற்கு ரிவ்யூ கேட்கப்பட்டது. விக்கெட்ஸ் ஹிட்டானதால், ஜடேஜா வெளியேறினார். கடைசி 1 பந்தில் 1 ரன் எடுக்க தீபக் சஹார் களமிறங்கினார். கடைசி பந்தில் 1 ரன் எடுத்து போட்டியை வென்றார் தீபக் சஹார். 

சிஎஸ்கேவின் கடைசி பந்து வெற்றிகள், நம்பர்ஸ் சொல்வது என்ன?

ஐபிஎல் வரலாற்றில், இந்த போட்டியையும் சேர்த்து இதுவரை 7 முறை கடைசி பந்தில் வெற்றியை ஈட்டியுள்ளது சென்னை. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மட்டுமே 3 முறை கடைசி பந்து வெற்றியை தட்டிச் சென்றுள்ளது. 2012-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2020-ம் ஆண்டு துபாயில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், 2021-ம் ஆண்டு அபுதாபியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் போட்டிகளை வென்றுள்ளது சிஎஸ்கே.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget