KKR vs DC, 1 Innings Highlight: டெல்லியை கதறவிட்ட கொல்கத்தா பவுலர்கள்.. வெற்றி பெற 128 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் கொல்கத்தா அணி 14 போட்டிகளிலும், டெல்லி அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 41வது போட்டியில் ஷார்ஜா மைதானத்தில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி அணியும், புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. இரு அணிகளும் தற்போது வலுவான நிலையில் இருப்பதால், ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ளும் முனைப்பில் உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஸ்டீவ் ஸ்மித், ஷிகர் தவான் ஓப்பனிங் களமிறங்கினார். வந்தவுடன் பவுண்டரிகளை தட்டி விளாசிய ஷிகர் தவான், அடுத்தடுத்து 5 பவுண்டரிகளை விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டுவார் என ஆனால், ஃபெர்குசன் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரை அடுத்து, ஸ்ரேயாஸ், ஹெட்மேயர், லலித் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். பண்ட், அஷ்வின் களத்தில் நிற்க, நிதானமாக ரன் சேர்த்த அவர்கள், தடுமாறி அணியின் ஸ்கோரை 100 ரன்களை கடக்க வைத்தனர். டிம் சவுதி வீசிய கடைசி ஓவரில், முதலில் அஷ்வின் வெளியேற அவரைத் தொடர்ந்து 39 ரன்கள் எடுத்திருந்தபோது பண்ட் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
#DelhiCapitals 6 down! @KKRiders are on a roll with the ball as Venkatesh Iyer scalps his second wicket. 👍 👍
— IndianPremierLeague (@IPL) September 28, 2021
Axar Patel departs. #VIVOIPL #KKRvDC
Follow the match 👉 https://t.co/TVHaNszqnd pic.twitter.com/Cf5V2ZLOho
கொல்கத்தா அணி பவுலர்களைப் பொருத்தவரை, ஃபெர்குசன், சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், டிம் சவுதி 1 விக்கெட்டும் எடுத்தனர். போட்டியின் கடைசி ஓவரில், இரண்டு ரன் அவுட்டுகளால் டெல்லி ரன் எடுக்க முடியாமல் திணறியது. இதனால், 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி 127 ரன்கள் எடுத்தது.
இதுவரை ஐபிஎல் தொடரில்:
ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் கொல்கத்தா அணி 14 போட்டிகளிலும், டெல்லி அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை. இன்று போட்டி நடைபெற உள்ள ஷார்ஜா மைதானத்தில் இரு அணிகளும் ஒருமுறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.