நடராஜனுக்கு பதில் எண்ட்ரி..150 கிமீ வேகம்..இர்ஃபான் பதான் மாணவர் - யார் இந்த காஷ்மீர் வீரர் உம்ரான் மாலிக்?
சில வருடங்களாக ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக பணியாற்றிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானின் கண்டுபிடிப்புதான் உம்ரான் மாலிக்கும், அப்துல் சமாத்தும்.
21 வயதேயான இளம் வீரர் உம்ரான் மாலிக், நடைப்பு ஐபிஎல் தொடரில் 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகாக விளையாடி வரும் உம்ரான் மாலிக்குக்கு இதுவே அறிமுக ஐபிஎல் தொடர்.
காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் இருந்து விலகிய தமிழ்நாடு வீரர் டி.நடராஜன் இரண்டாம் பாதி போட்டிக்ளில் பங்கேற்க தயாரானார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட, இரண்டாம் பாதி போட்டிகளில் இருந்தும் விலகினார். அவருக்கு பதிலாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் காஷ்மீரைச் சேர்ந்த வேகப் புயல் உம்ரான் மாலிக்கை தேர்வு செய்தது.
இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்து சுமராக விளையாடி வரும் ஹைதராபாத் அணி, முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதனால், மீதமிருக்கும் போட்டிகளில் ஆறுதல் வெற்றிக்காக விளையாடி வருகிறது ஹைதராபாத் அணி. இந்நிலையில், அக்டோபர் 3-ம் தேதி துபாயில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய ஹைதரபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், அந்த அணிக்காக விளையாடிய உம்ரான் மாலிக் வைரலானார்.
Umran Malik impressed everyone with raw pace 🔥🔥 against #KKR. @SunRisers 🧡 Captain Kane Williamson termed him as "special" 😊#VIVOIPL | #KKRvSRH pic.twitter.com/pKpajQzLwU
— IndianPremierLeague (@IPL) October 3, 2021
யார் இந்த வேகப்புயல் உம்ரான் மாலிக்?
இந்த ஐபிஎல் சீசனில் அறிமுகமானதன் மூலம், ஜம்மு காஷ்மீரில் இருந்து ஐபிஎல் விளையாடும் நான்காவது வீரரானார் உம்ரான் மாலிக். 2020-21 சையத் முஸ்தாக் அலி கோப்பையில் ஜம்மு காஷ்மீர் அணிக்காக அறிமுகமான அவர், ஐபிஎல் தொடரிலும் தடம் பதித்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், புவனேஷ்வர் குமார், ரஷித் கான், ஜேசன் ஹோல்டர், சித்தார்த் கவுல் என நட்சத்திர பெளலர்களுக்கு மத்தியில் களமிறங்கிய உம்ரான் மாலிக், 150 கி.மீ வேகத்தில் பந்துவீசினார். இதனால், ஐபிஎல் தொடரில் 150 கி,மீ+ வேகத்தில் பந்துவீசிய டாப் 10 பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய கிரிக்கெட்ட என பெயரைப் பதிவு செய்துள்ளார் உம்ரான் மாலிக்.
Only one Indian in Top 10 - Umran Malik. pic.twitter.com/VUjzAsDy3x
— Johns. (@CricCrazyJohns) October 3, 2021
முதல் ஓவரில் 145 கி.மீ வேகத்தில் வீசிய அவர், அடுத்த ஓவரில் 150 கி.மீ வேகத்தை எட்டினார். இந்த போட்டியில் நான்கு ஓவர்கள் வீசிய அவர், விக்கெட் ஏதும் எடுக்காமல் 27 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இளம் வீரரான உம்ரான் மாலிக், ஹைதரபாத் அணியின் நெட் பெளலராக இருந்து ஐபிஎல் தொடரில் இப்போது அறிமுகமாகி உள்ளார். ஹைதராபாத் அணிக்காக மற்றுமொரு காஷ்மீர் வீரரான அப்துல் சமாத் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களாக ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக பணியாற்றிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானின் கண்டுபிடிப்புதான் உம்ரான் மாலிக்கும், அப்துல் சமாத்தும். இரு வீரர்களும் டி-20 கிரிக்கெட்டில் அசத்தில் வருவதால், அவர்களது அசத்தல் பர்ஃபாமென்ஸ்களுக்கு இர்ஃபான் பதானுக்கும் சேர்த்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.