Natarajan Tests Covid 19 Positive: தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா... ஐபிஎல் ரத்தாக வாய்ப்பு?
IPL 2021, Natarajan Tests Covid 19 Positive: மற்ற வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு ஆர்டி.பிசிஆர் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மைதானத்தில் இன்று ஐ.பி.எல். தொடரின் 33வது ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும், புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ள ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோத உள்ளன.
இந்நிலையில், ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்றைய போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மற்ற வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு ஆர்டி.பிசிஆர் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
One Sunrisers Hyderabad player found COVID positive, fate of evening match against Delhi Capitals hinges on RTPCR reports of remaining squad
— Press Trust of India (@PTI_News) September 22, 2021
இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் தமிழக வீரர் நடராஜன் என்பது சற்று முன் உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டாலும், நடராஜனுக்கு தொற்றுக்கான அறிகுறி இல்லை என மருத்துவ குழு தெரிவித்துள்ளது.
மேலும், நடராஜனுடன் தொடர்பில் இருந்த ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஆறு பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றொரு தமிழக வீரரான விஜய் சங்கர், நெட் பவுலர் பெரியசாமி, அணி மேலாளர் விஜய் குமார், பிஸியோதெரபிஸ்ட் ஷியாம் சுந்தர், மருத்துவர் அஞ்சனா, லாஜிஸ்டிக்ஸ் மேலாளர் துஷார் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
T Natarajan has tested positive for COVID-19, and is presently in isolation.
— SunRisers Hyderabad (@SunRisers) September 22, 2021
We wish you a swift and full recovery, Nattu. 🙏 https://t.co/vZDP6gvLLT pic.twitter.com/6x7OSunc7m
இவர்களை தவிர மற்ற வீரர்களுக்கு இன்று காலை எடுக்கப்பட்ட ஆர்டி.பிசிஆர் பரிசோதனை முடிவில், தொற்று இல்லை என்பது உறுதியானதால் திட்டமிட்டபடி டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான போட்டி நடைபெறுக் என ஐபிஎல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முக்கிய வீரர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளதால், தீவிர பரிசோதனைக்கு பிறகே போட்டி நடைபெறும் என தெரிகிறது.