IPL 2022 Terror Threat: தீவிரவாத தாக்குதல் குறித்து வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம்.. காவல்துறை சொன்னது என்ன?
IPL 2022 Terror Threat: தீவிரவாத தாக்குதல் குறித்து வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம்- மும்பை போலீஸ் கமிஷனர்
ஐ.பி.எல. கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது. நாளை இரவு 7 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு அணிகளும் மோதுகின்றன.ஐ.பி.எல. விளையாட்டுப் போட்டிகள் மும்பையில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் நடக்கிறது.
இந்நிலையில், இந்த போட்டியின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகி வைரலானது.
இது குறித்து, மகாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் படையினர் (Maharashtra Anti-Terrorism Squad (ATS)) வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும், வான்கடே ஸ்டேடியம், வீரர்கள் தங்க இருக்கும் டிரிடண்ட் ஓட்டல் போன்ற இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். நடக்கும் விளையாட்டு மைதானங்களில் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்ஜய் பாண்டே, (Sanjay Pandey) ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
News about #terrorthreat on #ipl is unfounded. Please don’t rely on any such news.
— Sanjay Pandey (@sanjayp_1) March 24, 2022
மேலும்,கிரிக்கெட் வீரர்கள், அணியோடு தொடர்புடையவர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் மாநில ரிசர்வ் போலீஸ், விரைவுப்படை, வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐ.பி.எல் அணிகளின் வீரர்கள் செல்லும் வாகனங்களுகளுடன் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும். ஓட்டலில் வீரர்கள் வந்து செல்ல சிறப்பு வழி ஏற்படுத்தப்படும். பஸ் டிரைவர்கள் மற்றும் ஊழியர்கள் முழுமையாக சோதனக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும், போட்டியின் போது இவர்களை மாற்ற அனுமதிக்கப்படாது. வீரர்கள் பார்வையாளர் யாரையாவது சந்திக்க வேண்டுமானால் அணியின் மேலாளரிடம் அனுமதி பெறவேண்டும். ஓட்டல் ஊழியர்கள் அடையாள அட்டை இல்லாமல் வரக்கூடாது போன்ற முன்னெச்சரிக்கை வழிமுறைகள் பின்னபற்ற உள்ளதாகவும் மும்பை போலீஸ் உறுதிப்படுத்தி உள்ளது.
மும்பை வான்கடே ஸ்டேடியம் மட்டுமல்லாது டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியம், பிரபோர்னே ஸ்டேடியம், எம்.சி.ஏ.ஸ்டேடியம் புனே போன்ற பகுதிகளிலும் ஐ.பி.எல் போட்டிகள் நடக்கவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.இம்மாதம் 26-ம் தேதியிலிருந்து மே 22-ம் தேதி வரை இந்த பாதுகாப்பு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்