GT vs RR, IPL 2023 1st Innings Highlights: அரை சதத்தை தவறவிட்ட கில்- மில்லர்; ராஜஸ்தானுக்கு 178 ரன்கள் இலக்கு..!
GT vs RR, IPL 2023 1st Innings Highlights: 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் தொடரின் நடப்புச் சாம்பியனான குஜராத் டைட்டனஸ் அணியும் கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை அணியுமான ரஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. ஏற்கனவே இந்த இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளில் குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக தனது இன்னிங்ஸை தொடங்கிய குஜராத் அணிக்கு ராஜஸ்தான் அணியின் ட்ரென்ட் போல்ட் தனது சிறப்பான பந்து வீச்சினால், விரத்திமான் சாஹாவை வீழ்த்தினார். இதனால் முதலில் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி வந்த குஜராத் அணி பவர்ப்ளேவிற்குப் பிறகு அதிரடி காட்டத்தொடங்கினர்.
இதனால் ரன் கிடுகிடுவென உயர்ந்தது. இரண்டாவது விக்கெட் வீழ்ந்ததற்குப் பிறகு களமிறங்கிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கியது முதல் பந்துகளை சிக்ஸருக்கு அனுப்புவதில் குறியாக இருந்தார். ஆனால் அவர் sஅஹால் பந்து வீச்சில் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தனது விக்கெட்டை இழந்தார்.
இதன் பின்னர் குஜராத் அணியின் ரன் வேகம் அப்படியே மந்தமனது. இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், சஹால், ஜாம்பா சிறப்பாக பந்து வீசியது தான். தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் 34 பந்தில் 45 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதன் பின்னர், குஜராத் அணியினர் அதிரடி காட்டினர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி சார்பில் சுப்மன் கில் 45 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 28 ரன்களும் மில்லர் 46 ரன்களும் எடுத்து இருந்தனர். மேலும், ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் சஹால், ஆடம் ஜாம்பா, போல்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். சந்தீப் சர்மா மட்டும் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.