மேலும் அறிய

GT vs RR, IPL 202 Highlights: குஜராத்தை பழிதீர்த்த ராஜஸ்தான்; 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி..!

GT vs RR, IPL 202 Highlights: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

GT vs RR, IPL 202 Highlights:  ஐபிஎல் தொடரின் நடப்புச் சாம்பியனான குஜராத் டைட்டனஸ் அணியும்  கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை அணியுமான ரஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது.  இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.  ஏற்கனவே இந்த இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளில் குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ராஜஸ்தான் அணிக்கு எதிராக தனது இன்னிங்ஸை தொடங்கிய குஜராத் அணிக்கு ராஜஸ்தான் அணியின் ட்ரென்ட் போல்ட் தனது சிறப்பான பந்து வீச்சினால், விரத்திமான் சாஹாவை வீழ்த்தினார். இதனால் முதலில் நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதன் பின்னர் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி வந்த குஜராத் அணி பவர்ப்ளேவிற்குப் பிறகு அதிரடி காட்டத்தொடங்கினர். 

இதனால் ரன் கிடுகிடுவென உயர்ந்தது. இரண்டாவது விக்கெட் வீழ்ந்ததற்குப் பிறகு களமிறங்கிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கியது முதல் பந்துகளை சிக்ஸருக்கு அனுப்புவதில் குறியாக இருந்தார். ஆனால் அவர் sஅஹால் பந்து வீச்சில் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தனது விக்கெட்டை இழந்தார். 

இதன் பின்னர் குஜராத் அணியின் ரன் வேகம் அப்படியே மந்தமனது. இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், சஹால், ஜாம்பா சிறப்பாக பந்து வீசியது தான். தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் 34 பந்தில் 45 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி சார்பில் சுப்மன் கில் 45 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 28 ரன்களும் மில்லர் 46 ரன்களும் எடுத்து இருந்தனர். மேலும், ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் சஹால், ஆடம் ஜாம்பா, போல்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். சந்தீப் சர்மா மட்டும் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

அதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அதாவது, தொடக்க ஆட்டக்காரர்கள் வெளியேறினர். இதனால் போட்டி தொடக்கத்தில் குஜராத் அணியின் வசம் சென்றது. இதனால் நிதனாமாக ரன் குவித்து வந்த ராஜஸ்தான் அணி 12 ஓவர்களுக்குப் பிறகு அதிரடி காட்ட ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் அணி கேப்டன் சாம்சன் ரஷித் கான் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசினார். 

ஒரு கட்டத்தில் அவரும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் போட்டியில் பரப்ரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி 2 ஓவர்களில் 23 ரன்கள் தேவை என்ற நிலையில் ராஜஸ்தான் அணி விளையாடியது. 19 ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய ஜுரோல் அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் மைதானத்தில் இருந்த குஜராத் ரசிகர்கள் ஆரவாரத்தில் துள்ளிக் குதித்தனர். அதன் பின்னர் வந்த அஸ்வின் பவுண்டரியும் சிக்ஸரும் விளாசி அசத்தினார்.  இறுதியில் ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
Embed widget