GT vs DC IPL 2023: வெற்றியை தொடருமா குஜராத்..? உடைத்தெறியுமா டெல்லி..? புள்ளி பட்டியல் சொல்வது என்ன?
ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் மோது இரண்டாவது போட்டி இதுவாகும். கடந்த சீசனில் அறிமுகமான மற்றும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி மைதானத்திற்கு வருவது இதுவே முதல்முறை.
இந்தியன் பிரீமியர் லீக் (2023)தொடரின் 7வது போட்டியில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த டெல்லி அணி, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்கும்.
அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் மோது இரண்டாவது போட்டி இதுவாகும். கடந்த சீசனில் அறிமுகமான மற்றும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி மைதானத்திற்கு வருவது இதுவே முதல்முறை. இதன் காரணமாக இந்த போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தநிலையில், இரு அணிகளுக்கிடையேயான புள்ளி விவரங்கள், சாதனை பட்டியல் போன்றவற்றை வரிசையாக காணலாம்.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை ஒரே போட்டியில் மட்டுமே மோதியுள்ளது. அந்த போட்டியிலும் குஜராத் அணியே வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 172 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. குஜராத் அணியின் பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் 4 விக்கெட்கள் எடுத்திருந்தார்.
புள்ளி விவரங்கள் | குஜராத் டைட்டன்ஸ் | டெல்லி கேபிடல்ஸ் |
அதிகபட்ச ரன்கள் | 171 | 157 |
வெற்றி | 1 | 0 |
அதிக ரன்கள் | சுப்மன் கில் (84) | ரிஷப் பண்ட் (43) |
அதிகபட்ச ரன்கள் | சுப்மன் கில் (84) | ரிஷப் பண்ட் (43) |
அதிக விக்கெட்கள் | லாக்கி பெர்குசன் (4) | முஸ்தாபிசுர் ரஹ்மான் (3) |
சிறந்த பந்துவீச்சு | லாக்கி பெர்குசன் (4/28) | முஸ்தாபிசுர் ரஹ்மான் (3/23) |
அருண் ஜெட்லி மைதானம் டெல்லி அணிக்கு எப்படி..?
- போட்டிகள்: 70
- வெற்றி: 31
- தோல்வி: 38
- முடிவு இல்லை: 1
- முதலில் பேட்டிங் வெற்றி: 13
- சேஸிங்: 18
- கடந்த 2011 ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது.
- கடந்த 2013ம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக 83 ரன்களுக்குள் டெல்லி அணி சுருண்டது.
படைக்கவிருக்கும் சாதனைகள்:
ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் 6000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற 63 ரன்கள் தேவையாக உள்ளது.
சுப்மன் கில் ஐபிஎல் தொடரில் 2000 ரன்களை கடக்க இன்னும் 37 ரன்கள் தேவையாக உள்ளது.
குஜராத் கேப்டன் ஐபிஎல் தொடரில் 2000 ரன்களை கடக்க 29 ரன்கள் தேவையாக உள்ளது. அதேபோல், இவர் டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்கள் எடுக்க 5 விக்கெட்கள் தேவையாக உள்ளது.
டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்களை கடக்க ரோவ்மேன் பவலுக்கு 60 ரன்கள் தேவையாக உள்ளது.