GT vs CSK, Qualifier 1: டாஸ் வென்ற குஜராத்.. பேட் செய்த தயாரான சென்னை.. பிளேயிங் லெவனில் யாருக்கு இடம்?
GT vs CSK, Qualifier 1: ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
GT vs CSK, Qualifier 1: ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இதனிடையே முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு செல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் முதல் தகுதிச் சுற்றுப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணி தொடரிலிருந்து வெளியேறாது. மாறாக நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ - மும்பை அணிகள் மோதுகின்றது. இந்த ஆட்டத்தில் ஜெயிக்கும் அணியுடன் வெள்ளிக்கிழமை (மே 26) நடைபெறும் 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடும் என்பதால் இப்போட்டியில் யார் ஜெயிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.
பிளேயிங் லெவனில் யாருக்கு இடம்?
குஜராத் அணி: ஷுப்மன் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தசுன் ஷனகா, டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், தர்ஷன் நல்கண்டே, மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி
சென்னை அணி: ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா