மேலும் அறிய

GG-W Vs MI-W WPL 2023 Live:143 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி..! அசத்தலாக ஐ.பி.எல்.-யை தொடங்கிய மும்பை

மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதல் போட்டியான குஜராத் - மும்பை அணிகள் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

LIVE

Key Events
GG-W Vs MI-W WPL 2023 Live:143 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி..! அசத்தலாக ஐ.பி.எல்.-யை தொடங்கிய மும்பை

Background

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று மும்பையில் தொடங்குகிறது.  

சம்மர் வந்துவிட்டாலே அது அனல் பறக்கும் ஐபிஎல்-க்கான காலம் என அனைவரது மனதில் பதியும் அளவிற்கு கடந்த 15 ஆண்டுகளாக ஐபிஎல் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. பணம் அதிகம் புழங்கும் களம் என்பதால் ஐபிஎல் போட்டிக்கு என தனி மவுசே இங்கு உள்ளது எனலாம். அவ்வரிசையில் இன்று புதிய அத்தியாயமாக மகளிருக்கான 20 ஓவர் பிரிமியர் லீக் போட்டி இன்று தொடங்குகிறது. 

தொடக்க நாள் என்பதால் தொடக்க விழாவுடன் மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் முதல் போட்டி நடைபெறவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளவுள்ளன. முதல் மகளிர் பிரிமியர் லீக்கில் மொத்தம் ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன.  மும்பை இந்தியன்ஸ் (MI), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB), டெல்லி கேபிடல்ஸ் (DC), UP வாரியர்ஸ் (WPW) மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் (GG).

இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் எம்ஐ கேப்டனாகவும், தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆர்சிபி மகளிர் அணிக்கு கேப்டனகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய மகளிர் அணியின் வெற்றிகரமான கேப்டன் என புகழப்படும் மெக் லானிங் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தவுள்ளார், அதேபோல் பெத் மூனி குஜராத் ஜெயண்ட்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் யு.பி வாரியரஸ் அணிக்கு ஆஸ்திரேலிய மகளிர் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் அலிசா ஹீலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

மார்ச் மாதம் 4ஆம் தேதி அதாவது இன்று தொடங்கும் மகளிர் பிரிமியர் லீக்கின் இறுதிப் போட்டி மார்ச் மாதத்தின் 26வது நாளில் இறுதிப் போட்டியுடன் நிறைவு பெறுகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கும் தொடக்க விழாவில் மகளிர் பிரிமியர் லீக்கிற்கான தீப் பாடலை பாடகர் சங்கர் மகாதேவன் பாடவுள்ளார். மேலும், பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர் மகளிர் பிரீமியர் லீக் தொடக்க விழாவில் ராப்பரும் பாடகியுமான ஏபி தில்லானுடன் இணைந்து பாடுவார்கள் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்து இருந்தது. 

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் தலைவர் ரோஜர் பின்னி மற்ற பிசிசிஐ நிர்வாகிகளும் மகாராஸ்ட்ரா முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் பிரிமியர் லீக் 2023 தொடக்க விழா நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் மாலை 5.30 க்கு நடைபெறுகிறது.  அதேபோல் தொடக்க விழா மற்றும் போட்டியை  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஹாட்ஸ்டாரில் லைவ்வாக காணலாம். 

23:14 PM (IST)  •  04 Mar 2023

143 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி..! அசத்தலாக ஐ.பி.எல்.-யை தொடங்கிய மும்பை

மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட் முதல் சீசனின் முதல் போட்டியில் குஜராத் அணியை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியுடன் இந்த சீசனை மும்பை அணி தொடங்கியுள்ளது.

22:03 PM (IST)  •  04 Mar 2023

தடுமாறும் குஜராத்..!

3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்துள்ளது குஜராத்.

21:30 PM (IST)  •  04 Mar 2023

மும்பைனாலே அடிப்பாங்க போல..! குஜராத் அணிக்கு 208 ரன்கள் டார்கெட்..!

குஜராத் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த ஹர்மன்பிரீத் கவுர், மேத்யூஸ் அதிரடியால் மும்பை அணி 207 ரன்களை குவித்துள்ளது. 

21:18 PM (IST)  •  04 Mar 2023

சரவெடியாய் வெடித்த மும்பை கேப்டன் ஹர்மன்பீரீத் கவுர் அவுட்..! குஜராத் நிம்மதி..!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 65 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 

20:49 PM (IST)  •  04 Mar 2023

சிக்ஸர்களை பறக்கவிட்ட மேத்யூஸ் அவுட்..! இமாலய இலக்கை நிர்ணயிப்பாரா ஹர்மன்பிரீத்..?

குஜராத் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய மேத்யூஸ் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்த்தபோது 47 ரன்களில் அவுட்டானார். தற்போது ஹர்மன்பீரத் - கெர் ஜோடி சேர்ந்துள்ளனர். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Embed widget