Gautam Gambhir: 5000 பேருக்கு உதவுகிறேன்.. அதுக்கு காசு வேணும்.!அதான் அப்படி செய்தேன் - உண்மையை உடைத்த காம்பீர்
தான் ஏன் ஐபிஎல் தொடரில் பணி செய்கிறேன் என்பது தொடர்பாக முன்னாள் வீரரும் எம்பியுமான காம்பீர் மனம் திறந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர். இவர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியல் களத்தில் குதித்தார். பாஜக சார்பில் தற்போது அவர் எம்பியாக உள்ளார். 15வது ஐபிஎல் தொடரில் அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காம்பீர் இடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது அவர் எதற்காக ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறார் என்பது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு காம்பீர், “நான் தினமும் ஒரு 25 லட்சம் செலவு செய்து சுமார் 5000 பேருக்கு உணவு அளிக்கிறேன். இது மொத்தமாக ஒரு ஆண்டிற்கு 2.75 கோடி ரூபாயாக வருகிறது. அத்துடன் 25 லட்ச ரூபாய் செலவில் நான் ஒரு நூலகத்தை அமைத்துள்ளேன். இவை அனைத்தையும் நான் என்னுடைய சொந்த பணத்தில் செய்துள்ளேன். எம்பிக்கான நிதியிலிருந்து செய்யவில்லை.
अगर ईमानदारी से पैसे कमाकर जनता के लिए मुफ़्त रसोइयां, लाइब्रेरी, स्मॉग टॉवर लगाना ग़लत है, तो मैं ये ग़लती बार बार करूंगा! pic.twitter.com/dj4srwSdZ4
— Gautam Gambhir (@GautamGambhir) June 4, 2022
இந்த விஷயங்களுக்கு பணம் அளிக்க நான் வேலை செய்ய வேண்டும். இப்படி 5000 பேருக்கு உதவவும், நூலகம் அமைக்கவும் நான் ஐபிஎல் தொடரில் பணி செய்தேன். அத்துடன் வர்ணனையாளராகவும் பணி மேற்கொண்டு வருகிறேன். இந்த நல்ல விஷயத்திற்காக நான் செய்வதை சிலர் தவறு என்று கூறினால் அதை நான் மீண்டும் மீண்டும் செய்வேன்” எனப் பதிலளித்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றுப் போட்டி வரை முன்னேறியது. அந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. முதல் ஐபிஎல் தொடரில் களமிறங்கிய லக்னோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. கவுதம் காம்பீர் தற்போது கிழக்கு டெல்லியிலிருந்து மக்களவை எம்பியாக பணியாற்றி வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்