Raina To Uthappa : வாழ்த்துகள் சகோதரா...! சென்னைக்காக பயிற்சி எடுத்த உத்தப்பாவிற்கு வாழ்த்து கூறிய சி.எஸ்.கே. சிங்கம் ரெய்னா..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பயிற்சி எடுக்கும் ராபின் உத்தப்பாவிற்கு வாழ்த்துக்கள் சகோதரா என்று சுரேஷ் ரெய்னா வாழ்த்துகள் கூறியிருப்பது வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக தூணாக விளங்கியவர் சுரேஷ் ரெய்னா. மிஸ்டர் ஐ.பி.எல். என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவை இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கழற்றிவிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக மீண்டும் ஏலத்தில் எடுக்கப்பட்டவர் ராபின் உத்தப்பா. டுபிளிசிஸ் இல்லாததால் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஆட்டத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Warming up for #IPL2022! Let's go 😎 #WhistlePodu https://t.co/5GvFx32o2u
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) March 9, 2022
வரும் 26-ந் தேதி ஐ.பி.எல். போட்டி தொடங்க உள்ளதால் ராபின் உத்தப்பா தனது பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளார். அவர் பயிற்சி எடுக்கும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அவர்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவை டேக் செய்துள்ள சுரேஷ் ரெய்னா ராபின் உத்தப்பாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Best wishes brother
— Suresh Raina🇮🇳 (@ImRaina) March 9, 2022
அவர் ராபின் உத்தப்பாவிற்கு வாழ்த்துக்கள் சகோதரா என்று பதிவிட்டுள்ளார். ரெய்னாவின் இந்த டுவிட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரெய்னாவின் இந்த டுவிட்டர் பதிவிற்கு கீழ் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தோனியின் நிழலாகவே வலம் வந்த சுரேஷ் ரெய்னா தோனி ஆடாதபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தியுள்ளார். சென்னை அணி 4 முறை கோப்பையை கைப்பற்றியபோது அதில் 3 முறை கோப்பையை வெல்ல உதவியவர் சுரேஷ் ரெய்னா ஆவார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணிக்காக சுரேஷ் ரெய்னா ஆட உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவர் ஆடவில்லை என்பது இன்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொடரின் முதல் போட்டியில் சென்னையும், கொல்கத்தாவும் வரும் 26-ந் தேதி வான்கடேயில் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்