IPL CSK: ‛யார் ஏரியாவில் வந்து யார் சீன போடறது...’ -சென்னை அணிக்கு குவியும் வாழ்த்து!
சென்னை அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள அதன் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகேந்திர சிங் தோனியை அன்புடன் வரவேற்க சென்னை காத்திருக்கிறது - மு.க ஸ்டாலின்
![IPL CSK: ‛யார் ஏரியாவில் வந்து யார் சீன போடறது...’ -சென்னை அணிக்கு குவியும் வாழ்த்து! Fantabulous performance from Chennai Wishes Pour In As Chennai Super Kings Win IPL Final 2021 IPL CSK: ‛யார் ஏரியாவில் வந்து யார் சீன போடறது...’ -சென்னை அணிக்கு குவியும் வாழ்த்து!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/16/1b1a9600026df7a29bbb7bc73163d7ee_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
துபாயில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன் வித்தியாசத்தில் வென்றது. நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட சென்னை அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Winning trophies & winning hearts! 🏆 💛
— IndianPremierLeague (@IPL) October 15, 2021
It's time to say good night from Dubai with 'Thala' @msdhoni's special message for the @ChennaiIPL fans after #CSK's title triumph. 👏 💛#VIVOIPL | #Final | #CSKvKKR pic.twitter.com/gqkJMEH0gl
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில்," சென்னை அணியின் சிறப்பான ஆட்டம். சிங்கம் மீண்டும் கர்ஜித்தது. நான்காவது முறையாக ஐபிஎல் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்ட சென்னை அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள அதன் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் மகேந்திர சிங் தோனியை அன்புடன் வரவேற்க சென்னை காத்திருக்கிறது" என்று தெரிவித்தார்.
Fantabulous performance from @ChennaiIPL!
— M.K.Stalin (@mkstalin) October 15, 2021
The kings have roared back.
Congratulations to each and every #CSK player and fans across the globe on winning the #IPL trophy for the fourth time.
Chennai is waiting #AnbuDEN for @msdhoni to celebrate this victory! #Yellove #IPLFinal pic.twitter.com/N3V8khxrMO
தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் பி.சேகர்பாபு தனது ட்விட்டர் பதிவில், " மீண்டு வருவது - இதுதான் சென்னையின் வழக்கம்" என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பதிவின் மூலம் சென்னை அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
What a stellar performance!! #WhistlePodu #YellowisanEmotion #CSK #IPLFinal pic.twitter.com/EiV4hN8kCb
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 15, 2021
Congratulations @msdhoni and @ChennaiIPL on the 4th title.🏆🏆🏆👏👏👏. #IPLFinal #cskvskkr2021
— Mask up and take your vaccine🙏🙏🇮🇳 (@ashwinravi99) October 15, 2021
Lots to learn from this campaign of @KKRiders, great turn around.
இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரும், டெல்லி அணியின் வீரருமான ரவிச்சந்திர அஷ்வின் தனது ட்விட்டர் பதிவில், " நான்காவது முறையாக கோப்பையைத் தக்க வைத்துக் கொண்ட சென்னை அணிக்கும், எம்.எஸ் தோனிக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய கொல்கத்தா அணியிடம் புதிதாக நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
Team India so strong our mentor just won the IPL 😎 Congratulations @ChennaiIPL 👏🏼 #CSKvKKR #IPL2021
— Wasim Jaffer (@WasimJaffer14) October 15, 2021
#csk #WhistlePoduArmy #whistlepodu @ChennaiIPL wooooohoooooooooo..!!! pic.twitter.com/oevb8qUUEv
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) October 15, 2021
சி.எஸ்.கே அணி மீதும், கேப்டன் தோனி மீதும் எவ்ளோ வெறுப்பு! எவ்ளோ கிண்டல்! எவ்ளோ வன்மம்! தோல்விகள் கொண்டாடப்பட்டன! தவறுகள் பூதாகரமாக்கப் பட்டன.. இறுதியில் "யார் ஏரியாவில் வந்து யார் சீன போடறது" என அநாயசமாக மேலுமொரு கோப்பையை வென்று கொடுத்தார் தல #MSDhoni . Well done Team #CSK 👏👏
— SKP KARUNA (@skpkaruna) October 15, 2021
2010..2011..2018..2021 🏆 #CSK #CSKvsKKR
— S.Badrinath (@s_badrinath) October 15, 2021
நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பதிவில், "ஐபிஎல் போட்டித் தொடரில் வெற்றியடைய அதிகப்படியான விளையாட்டு பிரக்ஞை (விழிப்புணர்வு) தேவைப்பக்டுகிறது. தமிழ்நாட்டின் இதயத்துடிப்பாக விளங்கும் அந்த ஜார்கண்ட் மனிதனுக்கு இந்த பிரக்ஞை ஏராளமாக உள்ளது. அனுபவமும், பணிவும் இருந்தால் வயது தடையாக இருக்காது என்பதை நிரூபித்ததிற்கு நன்றி! சிஎஸ்கே" என்று பதிவிட்டார்.
The Lion .. as TOI says “IPL success requires game awareness, an attribute which the Man from Jharkhand and the heartthrob of Tamil Nadu possesses abundantly.” Well done CSK.. thank you for proving that experience and humility make great champions at any age. ❤️❤️🙏 pic.twitter.com/pZ4ggoKHP8
— Ranganathan Madhavan (@ActorMadhavan) October 15, 2021
இப்போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு 12 கோடி ரூபாயும், தோல்வியடையும் அணிக்கு 6 கோடி ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)