மேலும் அறிய

Virat Kohli: விராட் கோலி இன்னும் எவ்ளோ நாள் IPL ஆடுவார்? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலி 9 ஆயிரம் ரன்களை அடித்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை என்று ஆர்சிபி பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் புகழாரம் சூடியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரின் முக்கியமான அணியாக திகழ்வது நடப்பு சாம்பியன் ஆர்சிபி. இந்த அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதற்கு காரணம் விராட் கோலி.

9 ஆயிரம் ரன்கள்:

2008ம் ஆண்டு முதல் ஆர்சிபி-க்காக ஆடி வரும் விராட் கோலி ஐபிஎல் தொடரில் மட்டும் தன்னுடைய 9 ஆயிரம் ரன்களை நேற்று டெல்லி அணிக்கு எதிராக தனது சொந்த மைதானமான அருண் ஜெட்லி மைதானத்தில் எட்டி புதிய வரலாறு படைத்தார். ஐபிஎல் தொடரில் 9 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையையும் படைத்துள்ளார்.

எவ்வளவு நாள் ஆடுவார்?

விராட் கோலி 9 ஆயிரம் ரன்களை எட்டியது குறித்து ஆர்சிபி அணியின் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் கூறியிருப்பதாவது, அவர் வேற லெவல். 9 ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார். அவர் டேங்கில் இன்னும் நிறைய உள்ளது என்கிறார். இந்த மாதிரி ஒரு போட்டியில் அவர் மாதிரி பெரிய கிரிக்கெட்டரை மோடிவ் பண்றதே கஷ்டமாக இருக்கும்.  75 ரன்கள்தான் அடிக்கனுமேனு இருக்கும். ஆனால் அவர் போயிட்டு தொழில்முறை கிரிக்கெட் வீரராக முடித்தார். அவர் 9 ஆயிரம் ரன்களை அடித்ததில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவர் இன்னும் அதிக நாட்கள் ஆடப்போகிறார். 

இவ்வாறு அவர் கூறினார்.

கிரிக்கெட்டின் அரசன்:

ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கும் வரும் வீரர்கள் தோனி, கோலி மற்றும் ரோகித். இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான இவர்கள் 3 பேரும் இந்தியாவின் வெற்றிக்காக கடுமையாக போராடியுள்ளனர். 

சச்சின் டெண்டுல்கரின் முறியடிக்கவே முடியாத பல்வேறு சாதனைகளை முறியடித்த ஒரே வீரர் விராட் கோலி ஆவார். ஒருநாள் போட்டியில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்துள்ள விராட் கோலி தற்போது 100 சதங்கள் விளாசிய வீரர் என்ற மைல்கல்லை நோக்கி பயணித்து வருகிறார்.

37 வயதான விராட் கோலி இதுவரை 275 ஐபிஎல் போட்டிகளில் 267 போட்டிகளில் ஆடி 9 ஆயிரத்து 12 ரன்கள் எடுத்துள்ளார். இதை அவர் 6 ஆயிரத்து 735 பந்துகளில் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 113 ரன்கள் எடுத்துள்ளார். 42 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 808 பவுண்டரிகள், 305 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 8 சதங்கள்,  66 அரைசதங்கள் விளாசியுள்ளார். விராட் கோலியின் அபாரமான சாதனைகள் காரணமாக அவரை கிரிக்கெட்டின் அரசன் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

IPL 2026 RCB vs DC: பவர்ப்ளேவிலே இதுதான் கம்மி! மோசமான வரலாறு படைத்த டெல்லி! ஆர்சிபி பயங்கரம்!

தலைப்பு செய்திகள்

Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget