![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Dhoni Retirement: ரசிகர்களின் அன்புக்காக நான் அடுத்த ஆண்டும் விளையாடுவேன் - ஓய்வு குறித்து தோனி ஓபன் டாக்..!
Dhoni Retirement: சென்னை அணிக்கான 5வது ஐபிஎல் கோப்பையை வென்ற பின்னர், பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, ரசிகர்களின் அன்புக்காக நான் அடுத்த ஆண்டும் விளையாடுவேன் என கூறியுள்ளார்.
![Dhoni Retirement: ரசிகர்களின் அன்புக்காக நான் அடுத்த ஆண்டும் விளையாடுவேன் - ஓய்வு குறித்து தோனி ஓபன் டாக்..! Dhoni Retirement I will play next year because of the love they show for the fans Dhoni Says Dhoni Retirement: ரசிகர்களின் அன்புக்காக நான் அடுத்த ஆண்டும் விளையாடுவேன் - ஓய்வு குறித்து தோனி ஓபன் டாக்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/06/c48b26e349943d209c4c703487bb5182_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Dhoni Retirement: சென்னை அணிக்கான 5வது ஐபிஎல் கோப்பையை வென்ற பின்னர், பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, ரசிகர்களின் அன்புக்காக நான் அடுத்த ஆண்டும் விளையாடுவேன் என கூறியுள்ளார்.
16வது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை அணி தனது 5வது கோப்பையை வென்றது. அதன் பின்னர் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி, நான் எனது ஓய்வை அறிவிக்க இதைவிட சரியான நேரம் கிடைக்காது. ஆனால் ரசிகர்கள் என்மீது காட்டும் அன்புக்காக நான் அடுத்த ஆண்டும் விளையாடலாம் என இருக்கிறேன். அனைவருக்கு நன்றி என்று கூறிவிட்டு விலகிவிடுவது எளிது; ஆனால் அது மனதுக்கு கடினமானதாக இருக்கும். அதே நேரத்தில் வரும் 9 மாதங்களில் கடினமாக உழைத்து ரசிகர்களுக்காக அடுத்த சீசன் விளையாட முயற்சிப்பது தான் அவர்கள் எனக்கு கொடுக்கும் அன்புக்கு நான் செய்வதாக இருக்கும்.
அது ரசிகர்களுக்கு நான் கொடுக்கும் பரிசாக இருக்கும்; ஆனால் அது உடலுக்கு எளிதாக இருக்காது என தோனி கூறியுள்ளார். மேலும், இந்த சீசனின் தொடக்கத்தில் ரசிகர்கள் எனது பெயரை முழங்கும் போது எனக்கு கண்களில் நீர் தேங்கியது எனவும் கூறியுள்ளார்.
தோனி அடுத்த ஆண்டு விளையாடுவேன் எனக் கூறியுள்ளது சென்னை அணி ரசிகர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)