DC vs SRH, 1st innings: ஹைதரபாத்துக்கு எதிராக வார்னர் வெறியாட்டம்... டெல்லி அணி 207 ரன்கள் குவிப்பு!
விக்கெட்டுகள் சரிந்தாலும், தனது ஆட்டத்தில் மாறாது அதிரடி காட்டி வந்த வார்னர் 3 சிக்சர்கள், 12 பவுண்டரிகள் என வெளுத்து வாங்கினார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன. நடப்புத் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது வரை 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று முனைப்பில் தீவிரமாக பயிற்சி செய்தது.
இந்நிலையில் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதனை அடுத்து டெல்லி அணி ஓப்பனர்கள் மந்தீப் சிங், டேவிட் வார்னர் களமிறங்கினர். வந்த வேகத்தில், புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரிலேயே மந்தீப் அவுட்டாகி வெளியேறினார். அவரை அடுத்து மிட்சல் மார்ஷ் களமிறங்கினார்.
ஆனால், நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காத அவர் 5வது ஓவரில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால், பவர்ப்ளே முடிவதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது. கேப்டன் பண்ட் அணியை கரை சேர்ப்பார் என எதிர்ப்பார்த்தபோது 26 ரன்கள் எடுத்து அவரும் அவுட்டாக, பவல் களமிறங்கினார்.
விக்கெட்டுகள் சரிந்தாலும், தனது ஆட்டத்தில் மாறாது அதிரடி காட்டி வந்த வார்னர் 3 சிக்சர்கள், 12 பவுண்டரிகள் என வெளுத்து வாங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த பவல், 6 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 67 ரன்கள் எடுத்து வார்னருடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
𝗜𝗻𝗻𝗶𝗻𝗴𝘀 𝗕𝗿𝗲𝗮𝗸!
— IndianPremierLeague (@IPL) May 5, 2022
The stunning batting show from @davidwarner31 (92*) & Rovman Powell (67*) powers @DelhiCapitals to 207/3. 👏 👏
The @SunRisers chase to begin soon. 👍 👍
Scorecard ▶️ https://t.co/0T96z8GzHj#TATAIPL | #DCvSRH pic.twitter.com/ppoNlXjQFd
வார்னர் 92 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி 207 ரன்கள் எடுத்திருக்கிறது. கடினமான இலக்கை சேஸ் செய்து ஹைதராபாத் அணி அடுத்து களமிறங்க உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்