மேலும் அறிய

CSK vs RCB, IPL 2023: சென்னை - பெங்களூரு இன்று மோதல்..! 'கிங்'கோலியை சமாளிக்குமா 'தல' தோனி படை?

ஐ.பி.எல். தொடரில் இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி தொடங்க உள்ளது.

சென்னை - பெங்களூரு மோதல்:

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம். 

நடப்பு தொடரில் இதுவரை:

நடப்பு தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடி, தலா 2 வெற்றி மற்றும் 2 தோல்விகளை சந்தித்துள்ளன. இதையடுத்து ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முறையே 6 மற்றும் 7வது இடங்களை வகிக்கின்றன. சென்னை அணி கடைசியாக விளையாடிய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. பெங்களூரு அணி கடைசியாக விளையாடிய போட்டியில், டெல்லி அணிக்கு எதிராக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

அணிகளின் நிலவரம்:

சென்னை அணியில் ருதுராஜ், கான்வே, ரகானே, தோனி ஆகியோர் உடன் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கும் ராயுடுவும் நம்பிக்கை அளிக்கிறார். சாண்ட்னர்,  மொயீன் அலி மற்றும் ஜடேஜா ஆகியோர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சென்னை அணிக்கு வலுசேர்க்கின்றனர். பெங்களூரு அணியில் கோலி, டுப்ளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் நடுகள வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தால் மட்டுமே சென்னை அணியின் பேட்டிங் ஆர்டரை சமாளிக்க முடியும்.

மைதான நிலவரம்:

பெங்களூரு சின்னசாமி மைதானம் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமானது என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து சேஸிங் செய்யவே விரும்பும். எனவே, முதலில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும் அணி மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டியது கட்டாயம்.

சிறந்த பேட்ஸ்மேன் - இன்றை போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக கோலி திகழ வாய்ப்புள்ளது. நடப்பு தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களை அவர் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறந்த பந்துவீச்சாளர்: இன்றைய போட்டியின் சிறந்து பந்துவீச்சாளராக ஜடேஜா திகழ வாய்ப்புள்ளது. 

சென்னை உத்தேச அணி:

கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரகானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி, மிட்செல் சாண்ட்னர், மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் சிங், துஷார் தேஷ்பாண்டே

பெங்களூரு உத்தேச அணி:

கோலி, டுபிளெசிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் , வெய்ன் பார்னெல், வனிந்து ஹசரங்க, ஹர்ஷல் படேல், வைஷாக் விஜய்குமார், முகமது சிராஜ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Embed widget