CSK vs MI IPL 2023: சொந்த மைதானத்தில் வெற்றியை தனதாக்குமா சென்னை..? தொடர் ஆதிக்கத்தில் மும்பை.. ஹெட் டு ஹெட் ரெக்கார்ட்ஸ்!
சென்னை சிதம்பரம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்த மைதானமாக இருந்தாலும், ஆதிக்கம் செலுத்துவது என்னமோ, மும்பை இந்தியன்ஸ் அணிதான்.
ஐபிஎல் 2023 தொடரின் 49வது போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தியன் பிரீமியர் லீக்கின் இரண்டு வெற்றிகரமான அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி இதுவாகும்.
முந்தைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் வான்கடே மைதானத்தில் நடத்தியது. அந்த போட்டியில் ரஹானே அதிரடியாக விளையாடி அரைசதத்தை குவித்தார். இதையடுத்து, 18.1 ஓவர்களிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்கை எட்டி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இன்று சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அந்த தோல்விக்கு பழிவாங்கும் நோக்கில் களமிறங்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் போட்டி தொடங்கும் முன், இரு அணிகளுக்கு இடையிலான நேருக்கு நேர் சாதனையை இங்கே பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை 35 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில் அதிகபட்சமாக மும்பை அணி 20 முறையும், சென்னை அணி 15 முறையும் வெற்றி கண்டுள்ளது.
விளையாடிய போட்டிகள் - 35
சென்னை சூப்பர் கிங்ஸ் வென்ற போட்டிகள் - 15
மும்பை இந்தியன்ஸ் வென்ற போட்டிகள் - 20
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - மும்பை:
சென்னை சிதம்பரம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்த மைதானமாக இருந்தாலும், ஆதிக்கம் செலுத்துவது என்னமோ, மும்பை இந்தியன்ஸ் அணிதான். இதுவரை இந்த மைதானத்தில் இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளது. அதில் 5 முறை மும்பை அணியும், 2 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 5 போட்டிகளின் நிலைமை என்ன?
சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய கடைசி 5 போட்டிகளில் அதிகபட்சமாக சென்னை அணி 3 முறை வெற்றிபெற்றுள்ளது.
போட்டிகள் - 7
சென்னை சூப்பர் கிங்ஸ் வென்ற போட்டிகள் - 5
மும்பை இந்தியன்ஸ் வென்ற போட்டிகள் - 2
புள்ளி விவரங்கள்:
புள்ளி விவரங்கள் | சென்னை | மும்பை |
அதிகபட்ச ஸ்கோர் | 218 | 219 |
குறைந்தபட்ச ஸ்கோர் | 79 | 136 |
1st பேட்டிங் வெற்றி | 6 | 10 |
2nd பேட்டிங் வெற்றி | 9 | 10 |
அதிக ரன்கள் | சுரேஷ் ரெய்னா (710 ரன்கள்) | ரோகித் சர்மா (700 ரன்கள்) |
தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் | ருதுராஜ் - 88 நாட் அவுட் | சனத் ஜெயசூரியா - 118 நாட் அவுட் |
அதிக விக்கெட்கள் | ப்ராவோ - 30 | மலிங்கா - 31 |
சிறந்த பந்துவீச்சு | மோகித் சர்மா - (4/14) | ஹர்பஜன் சிங் (5/18) |
இரு அணிகள் :
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (கேப்டன்), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, அம்பதி ராயுடு, மிட்செல் ஷான்ட்னர், சுப்ரான்ஷு சான்ட்னர். ரஷீத், ஆகாஷ் சிங், டுவைன் பிரிட்டோரியஸ், ஆர்.எஸ்.ஹங்கர்கேகர், சிசண்டா மாகலா, அஜய் ஜாதவ் மண்டல், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், பகத் வர்மா, நிஷாந்த் சிந்து
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹால் வதேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால், அர்ஷத் கான், சூர்யகுமார் யாதவ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சந்தீப் வாரியர், விஷ்ணு வினோத் , ரிலே மெரிடித், ரமன்தீப் சிங், ஷம்ஸ் முலானி, அர்ஜுன் டெண்டுல்கர், ஹிருத்திக் ஷோக்கீன், டுவான் ஜான்சன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், ராகவ் கோயல்