CSK vs LSG, IPL 2023 LIVE: லக்னோவின் சிக்ஸர் மழைக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை; அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்..!
IPL 2023, Match 6, CSK vs LSG: சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
LIVE
Background
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16வது சீசனின் ஆறாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தனது சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்குகிறது. ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் லக்னோ அணிகளும் மோதும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும். கடந்த சீசனில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹோம் மைதானத்தில் சந்திப்பது இதுவே முதல் முறை.
இந்தநிலையில், இரு அணிகளுக்கிடையேயான புள்ளிவிவரங்கள் மற்றும் அதிக ரன் எடுத்த வீரர், அதிக விக்கெட்களை எடுத்த பந்துவீச்சாளர், சேப்பாக்கம் மைதானத்தின் சாதனை என அனைத்தையும் விரிவாக பார்க்கலாம்.
ஹெட் டூ ஹெட்:
ஐபிஎல் போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே ஒரு போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. அந்த போட்டியில் லக்னோ அணி, சென்னை அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 210 ரன்கள் குவித்தது. அதனை லக்னோ அணி சேஸ் செய்து வெற்றியும் பெற்றது.
இரு அணிகள் மோதிய புள்ளி விவரங்கள்:
புள்ளி விவரங்கள் | லக்னோ | சென்னை |
அதிகபட்ச ஸ்கோர் | 211 | 210 |
வெற்றி | 1 | 0 |
அதிக ரன்கள் | குயின்டன் டி காக் (61 ரன்கள்) | ராபின் உத்தப்பா (50 ரன்கள்) |
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் | குயின்டன் டி காக் (61) | ராபின் உத்தப்பா (50 ரன்கள்) |
அதிக விக்கெட்டுகள் | அவேஷ் கான், ரவி பிஷ்னோய், ஆண்ட்ரூ டை (2) | டுவைன் பெட்டோரியஸ் (2) |
சிறந்த பந்துவீச்சு | ரவி பிஷ்னோய் (2/24) | டுவைன் பெட்டோரியஸ் (2/31) |
சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சிஎஸ்கே சாதனை:
போட்டிகள்: 56
வெற்றி 40, தோல்வி 16
முதலில் செய்து பேட்டிங் வெற்றி : 26
சேஸிங்: 14
அதிகபட்ச ஸ்கோர்: கடந்த 2010ல் ராஜஸ்தான் எதிராக 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்லு 246 ரன்கள் சென்னை அணி குவித்தது.
குறைந்தபட்ச ஸ்கோர்: கடந்த 2019ல் மும்பைக்கு எதிராக 17.4 ஓவர்களில் 109 ஆல் அவுட்டானது சென்னை அணி.
இந்த போட்டியில் படைக்கவிருக்கும் ரெக்கார்ட்ஸ்:
- சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த ஏழாவது வீரர் என்ற பெருமையை பெற 8 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை கடக்க 52 ரன்கள் தேவையாக உள்ளது.
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சாளர் அவேஷ் கான் ஐபிஎல்லில் 50 விக்கெட்டுகளை பூர்த்தி செய்ய 1 விக்கெட் தேவையாக உள்ளது.
- அமித் மிஸ்ரா ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற லசித் மலிங்கா (170), யுஸ்வேந்திர சாஹல் (170) ஆகியோரை முறியடிப்பதற்கு இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.
கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ்.தோனி (கேப்டன்) டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, தீபக் சாஹர், மிட்செல் சான்ட்னர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கே.எல்.ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, ஆயுஷ் படோனி, மார்க் வூட், ஜெய்தேவ் உனட்கட், ரவி பிஷ்னோய், அவேஷ் கான்
CSK vs LSG Live Score: சென்னை வெற்றி..!
20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
CSK vs LSG Live Score: 19 ஓவர்களில்..!
19 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் சேர்த்துள்ளது.
CSK vs LSG Live Score: 18 ஓவர்கள் முடிவில்..!
18 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 181 ரன்கள் எடுத்துள்ளது.
CSK vs LSG Live Score: 17 ஓவர்களில்..!
17 ஓவர்கள் முடிவில் லக்னோ 174 - 6.
CSK vs LSG Live Score: விக்கெட் - 16 ஓவர்கள் முடிவில்..!
16 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடி வருகிறது.