CSK vs LSG Score LIVE: மழையால் கைவிடப்பட்ட போட்டி.. லக்னோ, சென்னைக்கு தலா ஒரு புள்ளி
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன
LIVE
Background
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன
லக்னோ - சென்னை அணிகள் மோதல்:
லக்னோவில் நடைபெறும் ஐபிஎல் 2023ன் 46வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்திய நேரப்படி இந்த போட்டியானது மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டி முதலில் மே 4ம் தேதி நாளை (வியாழன்) லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், லக்னோவில் நடைபெறவுள்ள மேயர் தேர்தல் காரணமாக போட்டி மாற்றியமைக்கப்பட்டது. இதையடுத்து, மே 4 ம் தேதிக்கு பதிலாக மே 3 ம் தேதி மாலை 4 மணிக்கு போட்டியை நடத்த ஐபிஎல் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
பழிதீர்க்குமா லக்னோ?
முந்தைய போட்டி சுருக்கம்:
இந்த சீசனில் சிஎஸ்கே மற்றும் எல்எஸ்ஜி மோதிய முந்தைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே 47 ரன்கள் எடுத்தார்.
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ, 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. லக்னோ அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 22 பந்துகளில் 53 ரன்களை விளாசினார். இதற்கு லக்னோ அணி பழிவாங்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச அணி (LSG):
கேஎல் ராகுல் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், யாஷ் தாக்கூர், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரவி பிஷ்னோய், அமித் மிஸ்ரா, நவீன்-உல்-ஹக்
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி(சிஎஸ்கே):
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அம்பதி ராயுடு, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பத்திரனா/மிட்செல் சான்ட்னர், மகேஷ் தீக்ஷனா
இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் வீரர்கள் யார்?
டெவான் கான்வே:
நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் டெவான் கான்வே மூன்றாம் இடத்தில் இருக்கிறார். இவர் ஒன்பது இன்னிங்ஸ்களில் 59.14 சராசரி 144.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 414 ரன்களைக் குவித்துள்ளார். இந்த சீசனில் ஐந்து அரை சதங்களை அடித்துள்ளார். மேலும், முந்தைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராகும். இன்றைய போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
துஷார் தேஷ்பாண்டே:
27 வயதாக துஷார் தேஷ்பாண்டே இதுவரை சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக பந்துவீசியுள்ளார். இதுவரை இவர் 9 போட்டிகளில் விளையாடி 21.70 சராசரியுடன் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். கடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 2 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி யாருக்கு?
வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி வெற்றிபெற வாய்ப்புள்ளது.
சென்னை போட்டி ரத்து
மழை காரணமாக சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர்
5 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டி..
மழை குறுக்கிட்டதன் காரணமாக, போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டு 7.28-க்கு போட்டி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
போட்டி தொடங்குவதில் தாமதம்..
தொடர்ந்து மழை பெய்வதால் போட்டி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
மீண்டும் குறுக்கிட்ட மழை..
19.2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது
7வது விக்கெட் காலி..
கவுதம் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்