CSK squad IPL 2024: தட்டித் தூக்கிய சிஎஸ்கே! ஐ.பி.எல். ஏலத்தின் முடிவில் சென்னை அணியில் உள்ள வீரர்கள் யார்? யார்?
CSK squad IPL 2024: ஐபிஎல் 2024 வீரர்களுக்கான ஏலத்தின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரங்கள் கீழே பட்டியலிப்பட்டுள்ளன.
CSK squad IPL 2024: ஐபிஎல் 2024 வீரர்களுக்கான ஏலத்தின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள மொத்த வீரர்கள் யார்?யார்? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் 2024 ஏலம்:
கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல்., தற்போது சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் 40 நாட்களுக்கு மேல் நடைபெறும் இந்த தொடரை, கிரிக்கெட் திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் இந்த தொடரில் பங்கேற்க, பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான வீரர்களின் ஏலம் நேற்று துபாயில் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. அதில், 10 அணி நிர்வாகங்களும் தங்களுக்கான வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:
மும்பை அணியை தொடர்ந்து 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சென்னை அணி, இந்த முறையும் தோனி தலைமையில் களமிறங்கியுள்ளது. ஏலத்திற்கு முன்பு 5 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 19 பேர் சென்னை அணியில் இடம்பெற்று இருந்தனர். 3 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 6 வீரர்கள் தேவைப்பட்ட நிலையில், 31.4 கோடியை கையிருப்பாக கொண்டிருந்தது.
The heartbeat of the city! 🫶🏻
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2023
The 2⃣5⃣ for the Summer Of '2⃣4⃣ are here! 🦁 pic.twitter.com/RPW2y353Uj
சென்னை அணி ஏலத்தில் எடுத்த வீரர்கள்:
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில், ரச்சின் ரவீந்திரா (ரூ.1.8 கோடி), ஷர்தூல் தாக்கூர் (ரூ.4 கோடி), டேரில் மிட்செல் (ரூ. 14 கோடி), சமீர் ரிஸ்வி (ரூ. 8.40 கோடி), முஸ்தபிசுர் ரஹ்மான் (ரூ.2 கோடி), அவனிஷ் ராவ் ஆரவெல்லி (ரூ. 20 லட்சம்) ஆகிய வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணியில் தற்போது 8 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 25 பேர் இடம்பெற்றுள்ளனர். கையிருப்பாக 1 கோடி ரூபாயை சென்னை அணி கொண்டுள்ளது.
சென்னை அணியில் காலியாக உள்ள உள்நாட்டு வீரர்களுக்கான ஸ்லாட்டுகள்: 0
சென்னை அணியில் காலியாக உள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான ஸ்லாட்டுகள்: 0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்:
தோனி (கேப்டன்), மொயீன் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷேக் சிங் ரஷீத், ஷேக் சிங் ரஷீத், எம். , நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தபிசுர் ரஹ்மான், அவனிஷ் ராவ் ஆரவெல்லி.