Watch Video: சித்திரை முதல் நாளில் சிரிக்கவைத்த சிஎஸ்கே வீரர்கள்... வீடியோ வெளியிட்டு கொண்டாட்டம்..!
பிஸியான அட்டவணைக்கு நடுவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நேற்று சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஐபிஎல் 16வது தொடர் கடந்த மார்ச் 31ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகளும் உள்ளே, வெளியே என சொந்த மைதானத்திலும், எதிரணி மைதானங்களில் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றன.
இந்தநிலையில், பிஸியான அட்டவணைக்கு நடுவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நேற்று சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். இதுகுறித்து, சிஎஸ்கே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில், கேப்டன் எம்.எஸ். தோனி, பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ என கேலியாக சேட்டைகள் செய்தனர். இந்த வீடியோ வெளியாக கொஞ்ச நேரத்தில் இணையத்தில் படுவேகமாக வைரலானது.
View this post on Instagram
வீடியோவில் தொடக்கத்தில், 2023 தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் என ஆரம்பித்து, காலை 7. 30 மணிக்கு ஷேக் ரஷீத் மற்றும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் இணைந்து கலக்கும் மங்கள இசை.
காலை 8 மணிக்கு ராக்கெட் ராஜா ருதுராஜ் கெய்க்வாட் எடுத்துரைக்கும் 2023 தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும்? என்ற பின்னணி குரலுடன் ருதுராஜ் ”அனைவருக்கும் இந்த நாள், இனிய நாளாக இருக்கும்” என தெரிவித்தார். தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு மேட்சை கடைசி பந்து வரை எடுத்து செல்வது சரியா? தவறா? துஷார் தேஷ்பாண்டே தலைமையில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றத்தை அடுத்து மதியம் 12.00 மணிக்கு உங்கள் அபிமான வீரர்கள் ரசித்து ருசிக்கும் நமக்கு சோறுதான் முக்கியம் என்று விளையாட்டாக வீடியோவை பதிவிட்டனர்.
மேலும் அந்த வீடியோவில், பிற்பகல் 1.30 மணிக்கு சிங்க பாதை என்ற தலைப்பில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகளும், பிற்பகல் 2.30 மணிக்கு மஞ்சள் மாயாஜாலம் என்ற தலைப்பில் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் பந்து வீச்சாளர் பிராவோ செய்த சேட்டைகள் பதிவிடப்பட்டு இருந்தது. அடுத்ததாக, பிற்பகல் 3.30 மணிக்கு ’அன்புடன் சேப்பாக்கம்’, மாலை 7 மணிக்கு ’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’, இரவு 8 மணிக்கு ‘அதிரடி நிறைவு’ என்ற தலைப்புடன் அந்த வீடியோ நிறைவு பெறுகிறது.
நேற்று தமிழ் புத்தாண்டில் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் துணை ஊழியர்கள் உட்பட அனைத்து சூப்பர் கிங்ஸ் வீரர்களும் ஒன்றாக உணவு உட்கொள்ளும் வீடியோவையும் சிஎஸ்கே நிர்வாகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது. அந்த வீடியோவின் தலைப்பில், ’ஒன்றாக அனைவரும் உணவு உட்கொள்கிறார்கள்’ என பதிவிட்டு இருந்தனர்.
View this post on Instagram
ஐபிஎல் 2023ல் நான்கு ஆட்டங்களில் விளையாடிய சிஎஸ்கே இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் கண்டுள்ளது. தற்போது புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.