(Source: ECI/ABP News/ABP Majha)
CSK IPL 2024 Schedule: 9வது முறையாக தொடக்கப் போட்டியில் களமிறங்கும் சி.எஸ்.கே! சென்னையில் எத்தனை போட்டிகள்?
ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் மார்ச் 22 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல் 2024:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடும் 17வது சீசன் நடைபெற உள்ளது.
9-வது முறையாக தொடக்க போட்டியில் சி.எஸ்.கே:
Chennai Super Kings part of the first match of 2009, 2011, 2012, 2018, 2019, 2020, 2022, 2023, 2024 in IPL. 🤯
— Johns. (@CricCrazyJohns) February 22, 2024
- The greatest team ever. pic.twitter.com/2K7YJMgLBd
இந்த முறை நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவனை இன்று(பிப்ரவரி 22) வெளியாகியுள்ளது. இந்நிலையில் முதல் போட்டி எங்கு நடைபெறும், இதில் எந்தெந்த அணிகள் மோதபோகின்றன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. அதன்படி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியின் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த போட்டிகள் மார்ச் மாதம் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2009, 2011, 2012, 2018, 2019, 2020, 2022, 2023 ஆம் ஆண்டு தங்களது முதல் போட்டியை ஐ.பி.எல் தொடரின் தொடக்க போட்டியாக விளையாடிய சூழலில் இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரிலும் தங்களது முதல் போட்டியை தொடக்க நாளிலேயே விளையாட இருக்கிறது.
முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்குமா தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. அதற்கான முக்கிய காரணம் தோனிக்கு இந்த ஐ.பி.எல் தொடர் தான் கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் தோனி இந்த முறையும் சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே அந்த அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது.
சென்னை அணி விளையாடும் போட்டிகள்:
- சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மார்ச் 22 - சென்னை - மாலை 7:30
- சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - மார்ச் 26 - சென்னை - மாலை 7:30
- சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் - மார்ச் 31 - விசாகப்பட்டினம் - மாலை 7:30
- சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஏப்ரல் 5 - ஹைதராபாத் - மாலை 7:30
ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள முதல் பட்டியலில் சென்னையில் மட்டும் 2 போட்டிகள் நடைபெற உள்ளது.