மேலும் அறிய

IPL CSK: சூப்பருப்பு.. சி.எஸ்.கே. போட்டியை பார்க்க மெட்ரோ ரயிலில் இலவசமா போங்க..! அதிரடி அறிவிப்பு..!

சென்னை அணி பங்கேற்கும் போட்டிகளை பார்க்கச் செல்லும் ரசிகர்களுக்கு மெட்ரோவில் இலவசமாக பயணிக்க அனுமதி என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

16ஆவது சீசன் ஐ.பி.எல். தொடர் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் நேற்று சென்னை அணி குஜராத் அணியிடம் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் அடுத்ததாக சென்னை அணி வரும் 3ஆம் தேதி (நாளை மறுநாள்) லக்னோ அணியுடன்  சேப்பாக்கம் மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுநாள் மோதும் நிலையில், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண ஆர்வத்துடன் வருகை தர உள்ளனர். 

மெட்ரோவில்  செல்ல மேட்ச் டிக்கெட் போதும்

இந்த நிலையில், சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை அணி பங்கேற்கும் போட்டிகள் அன்று மட்டும், சென்னை மெட்ரோவில் ரசிகர்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்இணைந்து ஏப்ரல், மே மாதங்களில் சென்னையில் நடக்கும் அனைத்து போட்டி நாட்களிலும் ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் வசதியாகப் பயணிக்க வழிவகை செய்துள்ளன. ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளுக்கான க்யூஆர் கோட் (QR Code) உடைய அனுமதி டிக்கெட்டுகளை உபயோகப்படுத்தி மெட்ரோ ரயிலில் இலவசமாகப் பயணித்து திரும்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, மேலும் மெட்ரோ நிலையத்திலிருந்து போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்துக்கு பஸ் சேவையையும் வழங்க உள்ளது.

5 மெட்ரோ நிலையங்களில் ஒளிபரப்பு

அதேபோல்,போட்டி நாள்களின் இரவு நேரங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வதற்காக மெட்ரோ ரயில்கள் இயக்கம் கூடுதலாக 90 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் 5 மெட்ரோ நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைந்து இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், வட பழனி, செண்ட்ரெல், திருமங்கலம், விம்கோ நகர், நந்தனம் ரயில் நிலையங்களில் எல்இடி திரையில் ஒளிபரப்படும் என்றும், போட்டிகளைப் பார்ப்பதற்கு தனிக் கட்டணம் ஏதுமில்லை மற்றும் சாதாரண மெட்ரோ பயணம் மற்றும் ரயில் நிலையங்களில் தங்கும் கட்டணமாக 1 மணி நேரத்துக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணி விவரம்:

எம்.எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, பகத் வர்மா, தீபக் சாஹர்,  ரவீந்திர ஜடேஜா, சிசண்டா மகலா, அஜய் மண்டல், முகேஷ் சௌத்ரி, மதீஷா பத்திரனா, டுவைன் பிரிட்டோரியஸ், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், அம்பதி ராயுடு, மிட்செல் சான்ட்னர், சுப்ரான்ஷு சேனாபதி, சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, பென் ஸ்டோக்ஸ், மஹீஷ் தீக்ஷனா

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறி அழுத முதல்வர் ஸ்டாலின்.. தாங்கி பிடித்த துணை முதல்வர் உதயநிதி!
முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறி அழுத ஸ்டாலின்.. தாங்கி பிடித்த உதயநிதி!
அரசு மரியாதையுடன் நடந்த ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு.. கண்ணீர் கடலில் தேசம்!
அரசு மரியாதையுடன் நடந்த ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு.. கண்ணீர் கடலில் தேசம்!
Nobel Prize 2024: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு கிடைத்த பெருமை!
Nobel Prize 2024: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு கிடைத்த பெருமை!
Vettaiyan Review: சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Noel Tata : TATA-ன் கிரீடம் யாருக்கு? ரத்தன் டாடாவின் மனசாட்சி! யார் இந்த நோயல் டாடா?Ratan Tata Untold love story  | ரத்தன் டாட்டா BREAK UP 💔 கடைசி வரை BACHELOR!Ratan Tata Passed away | RIP ரத்தன் டாடாஉடலுக்கு இறுதி அஞ்சலி! கண்ணீர் மழையில் மக்கள்History of Ratan Rata |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறி அழுத முதல்வர் ஸ்டாலின்.. தாங்கி பிடித்த துணை முதல்வர் உதயநிதி!
முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறி அழுத ஸ்டாலின்.. தாங்கி பிடித்த உதயநிதி!
அரசு மரியாதையுடன் நடந்த ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு.. கண்ணீர் கடலில் தேசம்!
அரசு மரியாதையுடன் நடந்த ரத்தன் டாடாவின் இறுதி சடங்கு.. கண்ணீர் கடலில் தேசம்!
Nobel Prize 2024: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு கிடைத்த பெருமை!
Nobel Prize 2024: இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு கிடைத்த பெருமை!
Vettaiyan Review: சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
Rafael Nadal: ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் : இதுதான் இவரது கடைசி போட்டி.!
Rafael Nadal: ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் : இதுதான் இவரது கடைசி போட்டி.!
H Raja speech:  கொலைகாரங்க சார் இந்த சர்க்கார்... கொந்தளித்த ஹெச்.ராஜா
கொலைகாரங்க சார் இந்த சர்க்கார்... கொந்தளித்த ஹெச்.ராஜா
தமிழகத்திற்கு ரூ 7,268 கோடி.. உபிக்கு எப்போவும் போல் ஜாக்பாட்தான்.. வரி பகிர்வை விடுவித்த மத்திய அரசு!
தமிழகத்திற்கு ரூ 7,268 கோடி.. உபிக்கு எப்போவும் போல் ஜாக்பாட்தான்.. வரி பகிர்வை விடுவித்த மத்திய அரசு!
அயன் பட பாணியில் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?
அயன் பட பாணியில் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Embed widget