Ben Stokes in IPL: ஏது ஒரு ரன்னுக்கு ஒரு கோடியா..! சென்னைக்கு பென் ஸ்டோக்ஸ் செய்தது நியாயமா?
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக 16.25 கோடிக்கு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட, பென் ஸ்டோக்ஸின் செயல்பாடு ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக 16.25 கோடிக்கு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட, பென் ஸ்டோக்ஸின் செயல்பாடு ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்ரூ.படுத்தியுள்ளது.
ரூ.16.25 கோடிக்கு ஏலம்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான பதற்றமானது தற்போது அல்ல, கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற மினி ஏலத்திலேயே தொற்றிக்கொண்டது.10 அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுக்கான வீரர்களை ஏலத்தில் எடுத்தன. அதில் சென்னை அணி தனது தரப்பிற்கு அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு, இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனும், ஆல்-ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸை ஏலத்தில் எடுத்தது. அவரது வருகை சென்னை அணிக்கு கூடுதல் பலமாக அமையும், தோனிக்கு அடுத்தபடியாக சென்னை அணியை வழிநடத்த அவர் தகுதியானவர் என பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன.
சொதப்பிய ஸ்டோக்ஸ்:
ஆனால், ரசிகர்களின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் ஸ்டோக்ஸ் தவிடுபொடியாக்கினார். நடப்பு தொடரில் வெறும் 2 போட்டிகளில் விளையாடிய அவர், அதிலும் பேட்டிங் மட்டுமே செய்தார் பந்துவீசவில்லை. இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 15 ரன்களை மட்டுமே சேர்த்தார். அதன் பிறகு காயம் காரணமாக ஓய்வளிகக்ப்பட்ட அவர் இறுதிவரை, பிளேயிங் லெவனில் இடம்பெறவே இல்லை. அதோடு, இங்கிலாந்து அணிக்கு விளையாடுவதற்காக, பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னதாகவே சென்னை அணியிலிருந்து இங்கிலாந்திற்கும் புறப்பட்டு சென்றுவிட்டார்.
ஒரு ரன்னுக்கு ஒரு கோடி:
இந்த நிலையில் அவரது ஏலத்தொகையுடன் ஒப்பிட்டு பார்த்தால், அவர் அடித்த ஒவ்வொரு ரன்னுக்கும் சென்னை அணி 1.08 கோடியை ஊதியமாக வழங்கியுள்ளது. அவருக்கு நிகராக மற்ற அணிகளால் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட, வீரர்கள் குறைந்தது ஒரு போட்டியிலாவது அணியின் வெற்றிக்கு உதவியுள்ளனர். ஆனால், பென் ஸ்டோக்ஸ் அப்படி எந்தவொரு பங்களிப்பையும் வழங்காதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. அடிக்கடி காயங்களால் அவதிப்படுவது மற்றும் லீக் போட்டிகளை காட்டிலும், தேசிய அணிக்காக விளையாடுவதற்கே அதிகம் முக்கியத்துவம் அளிப்பது போன்ற காரணங்களால், ஸ்டோக்ஸ் நீண்ட காலம் சென்னை அணியில் இருக்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்:
01. சாம் கரண் - பஞ்சாப் கிங்ஸ் - ரூ. 18.50 கோடி
02. கேமரூன் கிரீன் - மும்பை இந்தியன்ஸ் - ரூ.17.50 கோடி
03. பென் ஸ்டோக்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.16.25 கோடி
04. நிக்கோலஸ் பூரான் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ.16 கோடி
05. ஹாரி ப்ரூக் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ரூ.13.25 கோடி
06. மயங்க் அகர்வால் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ரூ. 8.25 கோடி
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட விரர்களில், மும்பை அணிக்காக விளையாடி வரும் கேமரூன் கிரீன் மட்டுமே தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 15 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உட்பட 422 ரன்களை குவித்து, 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.