Watch Video: ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள் விளாசிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ்; வைரல் வீடியோ!
டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரே ஓவரில் 5 பவுண்டரிகளை விளாசினார்.
ஐ.பி.எல் சீசன் 17:
ஐபிஎல் சீசன் 17ல் இன்று (ஏப்ரல் 27)டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் 43 வது லீக் போட்டி நடைபெற்றத். இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி ஜாக் ஃபிரேசர் மெக்குர்க் - அபிஷேக் பொரேல் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். பின்னர் களம் இறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் ஷாய் ஹோப் ரிஷப் பண்டும் அதிரடியான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்கள்.
Still not getting over these shots 🤯💥pic.twitter.com/QnKYNbf2PH
— Delhi Capitals (@DelhiCapitals) April 27, 2024
அந்தவகையில் ஜாக் ஃபிரேசர் மெக்குர்க் 27 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என மொத்தம் 87 ரன்கள் எடுத்தார். அபிஷேக் பொரேல் 36 ரன்கள், ஷாய் ஹோப் 41 ரன்கள், ரிஷப் பண்ட் 29 ரன்களும் எடுத்தனர்.
வைரல் வீடியோ:
Tristan Stubbs skills are superb. ⭐ pic.twitter.com/V7NngE9i0k
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 27, 2024
இதனைத் தொடர்ந்து ரிஷப் பண்டுடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 48 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் தான் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் விளையாடிய அதிரடி ஆட்டம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதாவது ஒரே ஓவரில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி 26 ரன்களைச் சேர்த்தார். இந்த வீடியோ காட்சி தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்று நடைபெற்ற வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதாவது ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை 10 லீக் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது.
இதில் 5 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ள அந்த அணி 10 புள்ளிகளை பெற்றிருக்கிறது. புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை 14 புள்ளிகளை பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்தில் இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Watch Video : போட்டி முடிந்த பிறகு ஷாருக்கான்போல் ஷஷாங்க் சிங் செய்த செயல்! வைரல் வீடியோ!
மேலும் படிக்க: DC vs MI Match Highlights: கை கொடுக்காத மும்பையின் போராட்டம்; 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி!