International Olympic Day 2021 | உலக ஒலிம்பிக் தினம் - வீரர்களுக்கு வாழ்த்துச்சொன்ன பிரதமர் மோடி!
இன்று பல்வேறு நாடுகளில் உலக ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது.
கடந்த 2020ம் ஆண்டு நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக தடைபட்டதால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் சார்பாக டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறும் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
The Olympic Games #Tokyo2020 will be held from 23 July until 8 August 2021.
— #Tokyo2020 (@Tokyo2020) March 30, 2020
More information here: https://t.co/ST25uXKglE pic.twitter.com/sQo1TIcH5O
ஒலிம்பிக் வரலாறு
கிரேக்க நகரமான ஒலிம்பியாவில் தான் முதன்முதலாக கிபி 770ம் ஆண்டின் இறுதியில் தொடங்கி கிபி 390 ஆண்டுகளின் ஆரம்பம் வரை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் அது ஒலிம்பிக் போட்டிகள் என்று அழைக்கப்படவில்லை. ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பல ஆண்டுகள் கோலாலகமாக நடைபெற்று வந்ததது இந்த பாரம்பரிய போட்டிகள். ஆனால் ரோமாபுரியை சேர்ந்து தியோடோஷயஸ் என்ற மன்னன் ஆட்சிக்கு வந்ததும் இந்த பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகள் தடைசெய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1894 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி மீண்டும் அந்த பாரம்பரிய போட்டிகள் நவீன வடிவம் பெற்றுது. ஒலிம்பிக் போட்டிகளின் தந்தை என்று அழைக்கப்படும் பியரி டி கூபர்டின் பாரம்பரியமிக்க போட்டிகளை மீண்டும் நடத்த ஆவனம்செய்தார். அவருடைய முயற்சியால் 1896ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகள் ஏதென்ஸ் நாட்டில் நடைபெற்றது. அன்று தொடங்கி இன்று வரை நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இந்த போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் போட்டியிடும் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி
WTC Final: கோலி-வில்லியம்சன்; பண்ட் - ஜடேஜா : நேற்றைய போட்டியில் வைரலான இரண்டு சம்பவங்கள் தெரியுமா?
இந்தியாவின் சார்பாக டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், அம்பு எய்தல் போட்டி, தடகள போட்டி, பேட்மிட்டன், குத்துச்சண்டை, ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ் மற்றும் மல்யுத்தம் உள்பட 14 போட்டிகளில் 101 வீரர் வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதற்கிடையே கொரோனாவால் ஒலிம்பிக் தொடரை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. ஆனால் அவசர நிலை தொடர்ந்து நீடித்தாலும் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.