'ஷிகர் தவானும், ட்ராவிட்டும்'- ட்விட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள் !
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 13ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்தியா கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடர் வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி கொழும்புவில் தொடங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சென்றதால் இலங்கை தொடருக்கு இளம் வீரர்கள் கொண்ட அணி செல்ல உள்ளது. இந்த அணிக்கு அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணிக்கு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுவாக இந்திய அணி எந்த தொடருக்கும் கிளம்புவதற்கு முன்பாக கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம். அந்தவகையில் இன்று தவான் மற்றும் ட்ராவிட் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை காணொலி மூலம் சந்தித்தனர்.
Say hello to #TeamIndia's captain & coach for the Sri Lanka tour 👋🤜🤛
— BCCI (@BCCI) June 27, 2021
We are excited. Are you? 😃#SLvIND pic.twitter.com/OnNMzRX4ZB
இவர் இருவரும் சேர்ந்து இருக்கும் படத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இந்தப் படத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக ஷிகர் தவானின் கப்பர் சிங் என்ற பட்டை பெயரையும் ராகுல் திராவிட் விளம்பரம் ஒன்றில் இந்திரா நகரின் குண்டா என்று சொன்ன வாக்கியத்தையும் சேர்த்து பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக பலர்,
Gabbar and Gunda of Indira Nagar 🔥😎
— VIRAT KOHLI👑🇮🇳 (@ammar_vk) June 27, 2021
Rahul David the coach of Indian Cricket Team 🙏 pic.twitter.com/X0qUJf0Ib0
— SAURABH SAGAR (@SAURABHSAGR) June 27, 2021
Finally We See Rahul Dravid Sir As A Coach For India. 💙 All The Best For Sri Lanka Series
— Kangkan Sarma (@imKangkanSarma) June 27, 2021
We want Rahul Dravid sir as a permanent coach for team India 🇮🇳❤️
— Aditya 🥀 (@dynamic_aditya_) June 27, 2021
Rahul Dravid - Most awaited Coach for the Indian Cricket Team 😍
— Siddharth Setia (@ethicalsid) June 27, 2021
Pura Indiranagar is excited, Namma area boy!
— Saurav09 (@sourabh_sn) June 27, 2021
Very excited to see dravid as coach and finally new captain. Please do the same in main team....dravid is the best coach India would get
— ankit shah (@ankitsh72) June 27, 2021
இவ்வாறு பலரும் ட்விட்டர் கணக்கில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்திய அணி ஜூலை 13,16,18 ஆகிய தேதி ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின்னர் ஜூலை 21,23,25 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெறும் கடைசி டி20 தொடர் இது என்பதால் இந்தத் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படுகிறாரா புஜாரா? காரணம் என்ன?