2025 நம்ம கையில.. உலகக்கோப்பை முதல் உள்ளூர் கோப்பை வரை வென்ற இந்திய மகளிர் அணி!
2025ம் ஆண்டு இந்திய மகளிர் அணியின் செயல்பாடு எப்படி இருந்துள்ளது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

இந்திய மகளிர் அணியின் செயல்பாடு என்பது கடந்த 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி என்றே கூற வேண்டும். குறிப்பாக, இந்த 2025ம் ஆண்டு இந்திய மகளிர் அணிக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது.
2025 இந்திய அணிக்கு எப்படி?
2025ம் ஆண்டு இந்திய மகளிர் அணிக்கு மிகப்பெரிய சாதனை ஒருநாள் உலகக்கோப்பையை முதன்முறையாக வென்றது ஆகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடியது.
2025ம் ஆண்டு இந்திய மகளிர் அணியின் ஆட்டத்திறன் எப்படி இருந்தது? என்ற புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.
ஒருநாள் போட்டிகள்:
மொத்தம் - 23 போட்டிகள்
வெற்றி பெற்றது - 15
தோல்வி - 7
முடிவில்லாதது - 1
வெற்றி சதவீதம் - 68.19 சதவீதம்
உள்நாட்டில் நடந்தது:
மொத்தம் - 14
வெற்றி - 8
தோல்வி - 5
முடிவில்லாதது - 1
வெற்றி சதவீதம் - 61.53 சதவீதம்
வெளிநாடு:
மொத்தம் - 9
வெற்றி - 7
தோல்வி - 2
முடிவில்லாதது - 0
வெற்றி சதவீதம் - 77.78 சதவீதம்
இந்திய அணிக்கு இந்த 2025ம் ஆண்டு ஒருநாள் போட்டிகள் மிகவும் திருப்திகரமானதாகவே அமைந்துள்ளது.
அதிக ரன்கள்:
2025ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக ஸ்மிரிதி மந்தனா உள்ளார். அவர் 23 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1362 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதங்கள், 5 அரைசதங்கள் அடங்கும். ஒரு போட்டியில் அவுட்டாகாமல் இருந்துள்ளார். அதிகபட்சமாக 135 ரன்கள் விளாசியுள்ளார். சராசரியாக 61.90 வைத்துள்ளார்.
சிறந்த பந்துவீச்சு:
இந்தாண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக வீசிய வீராங்கனையாக தீப்தி ஷர்மா உள்ளார். அவர் 23 போட்டிகளில் ஆடி 39 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1 முறை 4 விக்கெட்டும், 1 முறை 5 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
டி20-களில் எப்படி?
மொத்தம் - 9
வெற்றி - 7
தாேல்வி - 2
வெற்றி சதவீதம் - 77.78 சதவீதம்
உள்நாடு:
போட்டிகள் - 4
வெற்றி - 4
வெற்றி சதவீதம் - 100
வெளிநாடு:
போட்டிகள் - 5
வெற்றி - 3
தோல்வி - 2
வெற்றி சதவீதம் - 60
சிறந்த பேட்டிங்:
ஷபாலி வர்மா 2025ம் ஆண்டு 9 போட்டிகளில் ஆடி 412 ரன்கள் எடுத்துள்ளார். 4 அரைசதங்கள் விளாசியுள்ளார்.
சிறந்த பந்துவீச்சு:
2025ம் ஆண்டு பந்துவீச்சில் சிறந்த வீராங்கனையாக ஸ்ரீசரணி உள்ளார். 9 போட்டிகளில் ஆடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றியள்ளார். 1 முறை 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணியின் ஸ்மிரிதி மந்தனா, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வீராங்கனைகளாக இருந்தாலும் இந்தாண்டு ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஸ்னேகா ராணா ஆகிய வீராங்கனைகளும் ரசிகர்களின் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற வீராங்கனைகளாக உருவெடுத்தனர்.
ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவையும், இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியையும் வீழ்த்தியது இந்திய அணியின் மறக்க முடியாத தருணங்களாக இந்தாண்டு அமைந்துள்ளது.





















