மேலும் அறிய

Ind vs SL 2nd T20I: தொடரை வெல்லுமா இந்தியா...? இலங்கையுடன் இன்று 2வது டி20 போட்டி

இந்தியா மற்றும் இலங்கை மோதும் இரண்டாவது டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று இரவு நடைபெற உள்ளது.

ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த நிலையில், இலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நாட்டின் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் தொடங்கியது. அந்த போட்டியில் இந்திய அணி சூர்யகுமார் யாதவின் அபாரமான பேட்டிங், புவனேஷ்குமார் யாதவின் அற்புதமான பந்துவீச்சின் காரணமாக 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றும். இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடர் 1-1 என்ற சமன் நிலைக்கு வரும்.


Ind vs SL 2nd T20I: தொடரை வெல்லுமா இந்தியா...? இலங்கையுடன் இன்று 2வது டி20 போட்டி

இந்திய அணியைப் பொருத்தவரை பேட்டிங்கில் ஷிகர்தவான், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் நம்பிக்கை அளித்து வருகின்றனர். கடந்த போட்டியில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்த பிரித்வி ஷா இந்த போட்டியில் தனது அதிரடியை வெளிப்படுத்தினால் இந்திய அணியின் ரன் மிகப்பெரிய அளவில் உயரும். மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்ட்யா தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவது அணிக்கு கவலையளிக்கிறது.

பந்துவீச்சைப் பொருத்தவரை துணைகேப்டன் புவனேஷ்குமார் அற்புதமாக பந்துவீசி வருகிறார். கடந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெறவைத்தார். மேலும், ஹர்திக் பாண்ட்யாவும் வேகப்பந்துவீச்சில் துணையாக உள்ளார். சுழற்பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் தொடர்ந்து அணிக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். அவருக்கு துணையாக குல்தீப் யாதவ் உள்ளார்.


Ind vs SL 2nd T20I: தொடரை வெல்லுமா இந்தியா...? இலங்கையுடன் இன்று 2வது டி20 போட்டி

வலுவான இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணியின் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்க முடியும். இலங்கை அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ மட்டுமே தொடக்கம் முதல் சிறப்பாக ஆடி வருகிறார். அந்த அணியின் தூணாக தற்போது அவர்தான் உள்ளார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அசலங்கா இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா இந்திய அணிக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார்.

இந்த போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் ஒரு விக்கெட் வீழ்த்தினால் இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். சாஹல் இதுவரை இலங்கை அணிக்கு எதிராக 7 இன்னிங்சில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து வீரர் ஜோர்டான் 8 இன்னிங்சில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்துவதன் மூலம் சாஹல் புதிய சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தலைப்பு செய்திகள்

Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget