மேலும் அறிய

Ind vs Eng: கே.எல்.ராகுல் அவுட்... இந்தியா 34/2: இங்கி., பவுலர்கள் ஆதிக்கம்!

ராபின்சன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆன அவர், ரிவியூ கேட்ட நிலையில், ஆட்டமிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஏற்கனவே ரோஹித் விக்கெட்டை இழந்த நிலையில், தற்போது மற்றொரு துவக்க வீரரான கே.எல்.ராகுல் விக்கெட்டை இழந்துள்ளது. 44 பந்துகளை சந்தித்த ராகுல், 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராபின்சன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆன அவர், ரிவியூ கேட்ட நிலையில், ஆட்டமிழந்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது புஜ்ரா மற்றும் கோலி ஆகியோர் விளையாடி வருகின்றனர். இந்தியா 15.3 ஓவரில் 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. 

இங்கி-இந்தியா இன்றைய டெஸ்ட் போட்டி பற்றிய விரியான தகவல் இதோ:

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி டிராவாகவே, லார்ட்சில் இந்தியாவும், லீட்சில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளதால் இந்த தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரின் முக்கியமான 4வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.  இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், பெளலிங் தேர்வு செய்துள்ளார். 

முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ரோஹித் ஷர்மா, ராகுல் ஆகியோர் ஓப்பனிங் களமிறங்கினர். இன்னிங்ஸ் தொடக்கம் முதலே, ஆண்டர்சன் மற்றும் ராபின்சன் ஆகியோர் பெளலிங் செய்து வந்த நிலையில், 9வது ஓவரை கிறிஸ் வோக்ஸ் வீச வந்தார். அவர் வீசிய ஷார்ட் பாலை அடிக்க நினைத்த ரோஹித்துக்கு ஏமாற்றம். இங்கிலாந்துக்கு முக்கிய விக்கெட் கிடைத்துள்ளது. முதல் விக்கெட்டை கைப்பற்றி நம்பிக்கையாக விளையாட்டை தொடர்கிறது இங்கிலாந்து. இப்போது புஜாரா ஒன் - டவுன் களமிறங்கியுள்ளார். ராகுலும், புஜாராவும் பேட்டிங் செய்து வருகின்றனர்.

இந்திய அணி விவரம்: கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ரஹானே, புஜாரா, ராகுல், பண்ட், பும்ரா, ஜடேஜா, ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், பும்ரா, சிராஜ்

 

இங்கிலாந்து அணி விவரம்: ஜோ ரூட் (கேப்டன்), பர்ன்ஸ், ஹசீப், மாலன், போப், பேர்ஸ்டோ, மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்

இந்த போட்டியில் அஷ்வின் விளையாடுவார் என மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியிலும் அஷ்வின் இடம் பெறவில்லை. இது குறித்து ட்வீட் செய்துள்ள முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், அஷ்வினை இந்த நான்கு போட்டிகளிலும் எடுக்காதது மிகப்பெரிய தவறு என்று தெரிவித்துள்ளார். 

ஓவல் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில்  வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இந்தியா இதுவரை ஓவல் மைதானத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2011, 2014 மற்றும் 2018ம் ஆண்டுகளில் ஆடிய போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக, 2011 மற்றும் 2014ம் ஆண்டு போட்டிகளில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது.

இதனால், ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளாக தொடரும் இந்தியாவின் சோகத்திற்கு விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: லார்ட்ஸில் சதமடித்து சரித்திரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
லார்ட்ஸில் சதமடித்து சரித்திரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
FIFA Argentina Vs Spain: ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
விளையாட்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! சென்டாக் சேர்க்கையில் 35 விளையாட்டுகளுக்கு புதுச்சேரி அரசு அதிரடி அங்கீகாரம்!
விளையாட்டு வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! சென்டாக் சேர்க்கையில் 35 விளையாட்டுகளுக்கு புதுச்சேரி அரசு அதிரடி அங்கீகாரம்!

வீடியோ

Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
Honda ZR-V: இந்தியாவை கலக்க வரும் ஹோண்டா ஹைபிரிட் SUV கார்: விலை, மைலேஜ், அம்சங்கள்!
Honda ZR-V: இந்தியாவை கலக்க வரும் ஹோண்டா ஹைபிரிட் SUV கார்: விலை, மைலேஜ், அம்சங்கள்!
TVK Vijay: ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
Embed widget