மேலும் அறிய

Ind vs Eng 3rd Test: இந்தியா Vs இங்கிலாந்து : இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இந்திய அணி?

இங்கிலாந்து, லீட்சில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து நாட்டின் லீட்சில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி 78 ரன்களுக்கு சுருண்டு அதிர்ச்சி அளித்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.

கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சொதப்பிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்சும், ஹசீப் ஹமீதும் இந்த போட்டியில் சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 135 ரன்களை குவித்தனர். ரோரி பர்ன்ஸ் 61 ரன்களும், ஹசீப் ஹமீது 68 ரன்களும் குவித்தனர். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு அழைக்கப்பட்ட டேவிட் மலானும் ஒருநாள் போட்டியைப் போல ஆடி 78 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.


Ind vs Eng 3rd Test: இந்தியா Vs இங்கிலாந்து : இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இந்திய அணி?

இந்த தொடர் தொடங்கியது முதலே இந்திய அணிக்கு குடைச்சல் கொடுத்து வரும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இந்த இன்னிங்சிலும் சதம் அடித்து இங்கிலாந்து வலுவான நிலையை எட்ட உதவினார். இந்த தொடர் தொடங்கி நடைபெற்றுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இறுதியில் ரூட் 121 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் போல்டாகினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 423 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் உள்ளது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்க உள்ள நிலையில், இங்கிலாந்து அணி இந்தியை அணியை விட 345 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை இந்த தொடர் தொடங்கியது முதல் எந்தவொரு வீரரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.  ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, ஜடேஜா, ரிஷப்பண்ட் என்று ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் அவுட் ஆப் பார்மில்தான் உள்ளது. அதுவும் ரன் மெஷின் என்று வர்ணிக்கப்பட்டு வந்த கோலியின் பேட்டிங் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது.


Ind vs Eng 3rd Test: இந்தியா Vs இங்கிலாந்து : இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இந்திய அணி?

இந்திய அணி எப்படியும் இன்று தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிவிடும். அப்படி தொடங்கினால், இங்கிலாந்தைவிட முன்னிலை பெறுவது என்பதே சவாலான விஷயம் ஆகும். அதுவும் இந்திய அணி தற்போதுள்ள பேட்டிங் பார்மில் இங்கிலாந்தை விட முன்னிலை பெறுவது என்பது கடினமானது என்றே கருதப்படுகிறது. இங்கிலாந்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ராபின்சன், சாம்கரன், கிரெய்க் ஓவர்டன் என வலுவான பந்துவீச்சு உள்ளது.

இதையும் பார்க்கவும் : தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!

இதனால், இந்திய அணி இந்த போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா? என்பதே ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய முன்னாள் பேட்ஸ்மேன்கள் ராகுல் டிராவிட் மற்றும் லட்சுமணன் இணைந்து கொல்கத்தாவில் நிகழ்த்திய சாதனையைப்போல யாரேனும் அதிசயத்தை நிகழ்த்தினால் மட்டுமே இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க முடியும். இல்லாவிட்டால் வருணபகவான் வழிவகுத்து இந்திய அணியை காப்பாற்ற வேண்டும்.

இந்த நிலையில், மழையினால் மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்க சற்று தாமதமானது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் இங்கிலாந்து அணியினர் எஞ்சிய 2 விக்கெட்டுகளையும் இழந்தனர். இந்திய அணி தரப்பில் ஷமி 4 விக்கெட்டுளையும், பும்ரா, சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கி ஆடி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
Embed widget